பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dynamic link

498

dynamic page


மறையாக்கம், மறைவிலக்கம் செய்ய திறவிகள் (Keys) பயன்படுகின்றன. ஒரு பயனாளரின் தனித்திறவி (Private key) மூலம் மறையாக்கம் செய்யப்பட்ட தரவு அவருக்குரிய பொதுத்திறவி மூலம் மறைவிலக்கம் செய்யப்படுகிறது. தகவலை அனுப்பும்போது ஒவ்வொரு அனுப்புகையும் வெவ்வேறு திறவி களால் மறையாக்கம் செய்யப்பட்டு அனுப்பப் படலாம். மறுமுனையில் ஒருமுறை மறைவிலக்கத்துக்குப் பயன்படுத்திய திறவியை மீண்டும் பயன்படுத்த முடியாது. இந்த நுட்பம், தகவலின் பாதுகாப்பினை அதிகரிக்கிறது.

dynamic link : இயங்குநிலை இணைப்பு : ஒட்ட நேரத்தில் ஒரு செயல் முறையிலிருந்து இன்னொரு செயல்முறைக்கு ஏற்படுத்தப்படும் இணைப்பு.

dynamic link library : இயங்கு நிலை இணைப்பு நூலகம் : ஒட்ட நேரத்தில் பயன்பாடுகளுக்குக் கிடைக்கக்கூடிய செயல்முறை நெறியங்கள்.

dynamic memory : இயங்கு நிலை நினைவகம் : பலவிதமான நினைவுப் பதிப்பி சிற்றங்கள் அனைத்தையும் சரியான முறையில் இயங்கும் வகையில் அடிக்கடிப் புதுப்பிக்கப்படும் வகையில் அமைந்த நினைவுப் பதிப்பு அமைவு முறை.

dynamic memory allocation : இயங்குநிலை நினைவக ஒதுக்கீடு;நிகழ்நேர நினைவக ஒதுக்கீடு : ஒரு நிரல் அல்லது செயலாக்கத்துக்கான நினைவகப் பகுதியை இயக்க நேரத்தில் ஒதுக்கீடு செய்தல், நிரலின் கோரிக்கைக்கு ஏற்ப, முறைமை நினைவகக் குவியலில் இத்தகைய ஒதுக்கீடு செய்யப் படுகிறது.

dynamic method dispatch : இயங்கு நிலை வழிமுறை அனுப்புகை.

dynamic network services : இயக்காற்றல் இணையப் பணிகள் : தகவமைவு நிரல்கூறு, ஒரு மையமுனை சேர்க்கப்படுகிறபோது அல்லது நீக்கப்படுகிற போது இணையத்துக்குத் தானாகவே மறு உருவங்கொடுத்தல் போன்ற இயல்புநேரத் திறம்பாடுகள்.

dynamic object : இயங்கு நிலைப்பொருள்.

dynamic operand : இயங்கு நிலை செயலேற்பி.

dynamic page : இயங்குநிலை பக்கம் : அசைவூட்ட ஜிஃப்கள், ஜாவா அப்லெட்டுகள், ஆக்டிவ் எக்ஸ் இயக்குவிசைகளை உள்