பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ACՍ

49

adapter cards



முனையை நகர்த்தும் இயக்கப் பொறியமைப்பு.

ACU : ஏசியு : தானியங்குத் தொலைபேசி அழைப்புப் பிரிவு எனப் பொருள்படும். Automatic Calling Unit என்பதன் குறும்பெயர். இது தொலைபேசி இணைப்பில் அழைப்புகளை வணிக எந்திரம் ஒன்று அனுப்ப அனுமதிக்கிறது.

ada : அடா : ஒரு கணினி மொழி. அமெரிக்க இராணுவத் துறை உருவாக்கிய உயர்திறன் நிரலாக்க மொழி. உலகின் முதலாவது நிரலரான அடா அகஸ்டா லவ்லேஸ் நினைவாக 'அடா' எனப் பெயரிடப்பட்டது.

A-D Analog to Digital : தொடர்முறை இலக்கமுறை மாற்றி'

Ada Lovelace : அடா லவ்லேஸ் : சார்லஸ் பாபேஜுடன் பணியாற்றிய பெண். அப்பெண் ஆங்கிலக் கவிஞர் பைரன் பிரபுவின் மகள் கணிதவியலார். உலகின் முதல் நிரலர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

ADAPSO : எடாப்சோ : Association of Data Processing Service Organization என்பதன் குறும் பெயர். தரவு கையாளும் சேவை நிறுவனச் சங்கங்களின் கூட்டமைப்பின் பெயர். இந்த அமைப்பு ஆண்டுக்கொரு முறை உறுப் பினர்களின் பெயர்களை அகர வரிசையில் தொகுப்பாக வெளியிடுகிறது.

adapter : தகவி;இயைபி;பொருத்தி : பல்வேறு கருவி களுக்கிடையே இயைபை அனுமதிக்கும் கருவிப் பகுதி.


பொருத்தி


adapter boards : தகவிப் பலகைகள்;இயைபுப் பலகைகள் : அச்சிடப்பட்ட மின் இணைப்புப் பலகைகள். இவை ஒரு முறைமைப் பலகையை உள் ளீட்டு, வெளியீட்டுக் கருவிகளுடன் இணைக்கிறது அல்லது ஒரு முறைமையுடன் சிறப்பான பணிகளைச் சேர்க்கிறது.

adapter cards : தகவி அட்டைகள்;இயைபு அட்டைகள் : தகவிப் பல கைகளுக்கான மாற்றுப் பெயர்.