பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dynamic spot

500

. dz


dynamic spot : இயக்காற்றல் நிறுத்தம் : ஒரு செயல்முறை இயக்கப்படும்போது, இயக்குநரின் கவனத்தை ஏதாவதொரு அம்சத்திற்கு ஈர்ப்பது அவசியமாகிறது. ஒர் இயக்காற்றல் நிறுத்தமானது, அந்தச் செயல்முறையை ஒரே சமயத்தில் முடிவற்ற வளையத்திற்குள் கொண்டு செல்கிறது. எந்திரம் செய்முறைப்படுத்துவதை மீண்டும் தொடங்கிவிட்டது என்பதை இயக்கி சுட்டிக்காட்டுகிறது.

dynamic storage : இயங்குநிலை சேமிப்பகம் : தரவுகளை இழக்காமல் காப்பாற்ற அடிக்கடி மின்சக்தி ஏற்ற வேண்டிய தேவையுள்ள நினைவகச் சாதனம். அதிவேக இயக்க சேமிப்பகம்.

dynamic storage allocation : இயங்கு நிலை சேமிப்பக ஒதுக்கீடு : ஒரு செயல்வரைவு அல்லது நிரலாக்கத் தொடர் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது நினைவகத்தில் ஒதுக்கீடு செய்தல்,

dynamic tool display : இயங்குநிலை கருவிக் காட்சி : எண் மானத்தால், கட்டுப்படுத்தப்படும் அறுவைக் கருவியின் உருவத்தை வரைகலை முறையில் கட்டுகிற ஒரு CAD/CAM அம்சம்.

dynamic variable : இயங்கு நிலை மாறியல் மதிப்புரு : பாஸ்கல் (Pascal) போன்ற செயல் முறைப்படுத்தும் மொழியிலுள்ள ஒரு மாறியல் மதிப்புரு. ஒரு நிரலாக்கத் தொடர் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது உருவாக்கப்படுகிறது. பொதுவாக மாறியல் நிரலாக்கத் தொடர் எழுதப்படும்போதுதான் உருவாக்கப்படுகின்றன.

dynamic web page : இயங்குநிலை வலைப்பக்கம் : நிலையான வடிவம், மாறும் உள்ளடக்கம் கொண்ட வலைப்பக்கம். இணையத்தில் வரும் பயனாளரின் அடிப்படையில் கிடைத்த விடைகளைத் தாங்கிய பக்கமாக இருக்கலாம்.

. dz : . டிஇஸட் : இணையத்தில் ஒர் இணையதளம் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் களப் பெயர்.