பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

echo

503

eckert, j. Presper


பொறியமைவுகளிலிருந்து தரவு குறிப்புகளைக் கேட்கவும், தகவலிறக்கம் செய்யவும், முதன்மைப் பொறியமைவு நிரல்களைப் பிறப்பிக்கவும் DOS சொந்தக் கணினிகளை (PC) அனுமதிக்கிற IBM மென்பொருள். சொந்தக் கணினியிலிருந்து முதன்மைப் பொறியமைவுக்கு அச்சடிப்பி வெளிப்பாடுகளையும் இது அனுமதிக்கிறது.

echo : எதிரொலி;எதிரளிப்பு : மறுமொழி : 1. செய்தித் தரவு பரிமாற் றங்களின் போது அனுப்பப்பட்ட சமிக்கை சற்று தமாதமாக வருவதன் மூலம் சமிக்கை பிரதிபலிப்பதைக் குறிப்பிடுதல். 2. கணினி வரைகலைகளில், கணினி அமைப்பிற்கு வரை கலைகளை உள்ளீடு செய்யும்போது வடிவமைப்பவர் பெறும் பதில்கள்.

echo cancellation : எதிரொலி அழித்தறவு : முதன்மை அனுப்பீட்டுக் குறியீட்டிலிருந்து ஏற்படும் எதிரொலிகளினால் உண்டாகும் தேவையற்ற குறியீடுகளைத் தனிமைப்படுத்தி, வடிகட்டுவதற்கான மிகைவேக அதிர் விணக்க மற்றும் அதிர்விணக்க நீக்கத் தொழில்நுட்பம்.

echo check : எதிரொலி சோதனை;மறுமொழிச் சோதனை : தரவு கணினி இடமாற்றல் இயக்கத்தின் போது துல்லியத்தைச் சோதித்தல். இம்முறையில் பெறப்பட்ட தரவுகளைத் தொடங்கிய இடத்திற்கு அனுப்பி மூலத் தகவல்களுடன் ஒப்பிடுதல்.

echoplex : எதிரொலிச் சரிபார்ப்பு : தரவு தொடர்பில் பிழை கண்டறியப் பயன்படும் ஒரு நுட்பம். தகவலைப் பெறும் நிலையம், பெற்ற தகவலை மீண்டும், அனுப்பிய நிலையத்துக்குத் திருப்பியனுப்பும். அதனைத் திரையில் கண்டு, தரவு துல்லியமாகப் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

echo suppressor : எதிரொலி ஒடுக்கி : ஒரு தொலைபேசி இணைப்பில் எதிர்த்திசை அனுப்பீட்டுக்கு வழி செய்கிற செய்தித்தொடர்பு உத்தி. இதன் மூலம், மின்சுற்று வழியைத் திறம்பட ஒரு வழிச்சுற்றாக்க முடிகிறது. தொலைபேசி இணைப்புகளில், குறிப்பாகச் செயற்கைக்கோள் மின்சுற்று வழிகளில், இடையூறாக இருக்கும் எதிரொலி விளைவுகளைக் குறைக்க இது பயன்படுகிறது.

Eckert, J. Presper : எக்கர்ட், ஜே. பிரஸ்பெர் : ஜான் மவ்க்லியுடன் சேர்ந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூர் மின்பொறியியல் கல்லூரியில் 1943