பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ECL

504

edge connector


முதல் 1946-க்குள் ஈனியாக் கணினியை உருவாக்கியவர். முழுவதுமான பேரளவு மின்னணு இலக்கமுறை கணினி இதுதான். இன்று நாமறியும் கணினித் தொழிலை இதன் வளர்ச்சிதான் உருவாக்கியது.

ECL : இல்எல் : Emitter Coupled Logic என்பதன் குறும்பெயர். நடப்புமுறை அளவை என்றும் அழைக்கப்படுகிறது. டீடீஎல்ஐவிட வேகமானது. அவ்வளவு புகழ்பெற்றதல்ல.

eclipse : ஒளிமறைப்பு : 'டேட்டா ஜெனரல்'எனப்படும் அமைவனம் தயாரித்துள்ள 32 துண்மி நுண்கணினிகளின் வரிசை. தொடக்க 32 துண்மி உருவாக்கம்.

ECMA : எக்மா : ஐரோப்பியக் கணினி உற்பத்தியாளர் சங்கம்'என்று பொருள்படும் "European Computer Manufacturers' Association" என்ற ஆங்கிலத் தொடரின் தலைப்பெழுத்து குறும்பெயர்.

ECOM : ஈக்காம் : மின்னணு கணினி வழி அஞ்சல் : Electronic Computer Originated Mail என்பதன் குறும்பெயர். தொலைத் தகவல் தொடர்பு வசதிகள் மூலம் இலக்க வடிவில் செய்திகளை அனுப்பிப் பெறும் செயல்முறை.

E-commerce : மின் வணிகம்.கணினி பிணையங்கள் வழியாக வணிக நடவடிக்கைகளைப் பொதுவாகக் குறிக்கிறது. தற்போது இணையம் வழி நடைபெறும் வணிகத்தையும் இவ்வாறே குறிக்கின்றனர்.

ED : ஈடி : மிகை உயர் செறிவு : Extra High Density என்பதன் குறும்பெயர் இது 2. 88 MB /செருகு வட்டுகளைக் குறிக்கும்.

Edge : விளிம்பு : கணினி வரைகலையில் ஒரு கனசதுரத்தின் விளிம்புகள் போன்ற இரு திடப்பொருள்களின் சமதள முகப்புகளின் குறுக்கு வெட்டாக அமைந்துள்ள ஒரு நேர்கோட்டுக் கூறு.

edge card : விளிம்பு அட்டை : விளிம்பு இணைப்பியுடன் சேரும் வகையில் வடிவமைக்கப்பட்ட விளிம்பில் மட்டும் தொடரும் கோடுகள் உள்ள மின்சுற்று அட்டை.

edge connection socket : விளிம்பு இணைப்பு பொருத்துவாய் : விளிம்பு இணைப்பு குதை குழி.

edge cutter/trimmer : விளிம்பு வெட்டி/செதுக்கி : தொடர் வடிவ அச்சுக் காகிதத்தில் துண்டுப் பகுதிகளை வெட்டும் சாதனம்.

edge connector : விளிம்பு இணைப்பி : தாய் அட்டை அல்லது அடிப்பகுதியுடன் மின்சுற்று அட்டையை இணைக்கும்