பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

edge punched card

505

EDI


துளை விளிம்பி (Slot) வடிவ மின்சாதனப் பொருத்தி.

edge punched card : விளிம்பு துளையிடும் அட்டை : துளையிட்ட நாடாவில் பயன்படுத்துவது போன்ற மாதிரியில் ஒரு விளிம்பில் மட்டும் துளைகளை இட்டு தரவுகளைப் பதிவு செய்யும் அட்டை. ஐந்து, ஆறு, ஏழு அல்லது எட்டு வழித்தடங்களில் குறியிடப்பட்ட முறையில் துளைகள் இடப்படும் இருமைக் குறியீட்டு பதின்ம அமைப்பில் குறியீடு அமையும்.

edge sharpening : விளிம்புக் கூர்மையாக்கல் : இலக்கமாக்கப்பட்ட படத்தின் விளிம்புகளை செயல்முறை மூலம் அல்லது மின்னணுவியல் பேனாவின் மூலம் கூர்மையாக்கும் முறை.

EDI (Electronic Data Interchange) : ஈடிஐ : மின்னணுவியல் தரவு மாறுகொள்ளல் : அமைவனங்களிடையிலான மின்னணுவியல் செய்தித் தொடர்பு நடவடிக்கைகள். எடுத்துக்காட்டு : அனுப்பாணைகள்;உறுதி யுரைகள்;பற்றுச்சீட்டுகள். பயன்படுத்தப்படும் சாதனம் எவ்வாறிருப்பினும், மற்றொரு அமைவனத்தின் கணினி கட்டமைவுடன் பயனாளர் இடைத்

தொடர்பு கொள்வதற்கு இயல்விக்கிற ஈடிஐ பணிகளை தனித்தனிப் பணியமைவனங்கள் அளிக்கின்றன.