பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

edit

506

edit instruction


edit:சீர்மை செய்தல்:தொகு;பதிப்பி;உள்ளிடு: 1. தரவுகள் சரியா என்று சோதித்தல். 2. சில எழுத்துகளைச் சேர்த்தும்,நீக்கியும் தரவுகளின் வடிவத்தினை தேவையான அளவில் மாற்றல். நிரலாக்கத் தொடரின் ஒரு பகுதியை அச்சிடுவதற்காக தரவுகளை தொகுக்கலாம். தேவையற்ற சுழி (பூஜ்யம்)களை நீக்கியும் சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்தும் தொகுக்கப்படும்.

editable post script:தொகுக்கத்தக்க பின்குறிப்பு:ஒரு சொல் பகுப்பி அல்லது பிற வரைவு மூலம் தொகுக்கப்படத்தக்க பின் குறிப்பு நிரல்களின் கோப்பு. நிரல்களை முதலில் உருவாக்கிய பயன்பாட்டினைப் பயன் படுத்தாமல் அந்த பின்குறிப்பு ஆவணங்களை மாற்றுவதற்கு இது அனுமதிக்கிறது.

edit data source:மூலத் தரவைத் தொகு.

editing:தொகுப்பாக்கம்;தொகுத்தல்:தரவுகள் அல்லது ஒரு நிரலாக்கத் தொடரில் மாற்றங்கள் செய்தல் அல்லது திருத்துதல்.

editing a file:பதிப்பித்தல்:ஒரு கோப்பில் மாற்றங்கள் செய்தல் அல்லது திருத்துதல்.

editing keys:தொகுத்தல் விசைகள்:ஆவணத்தில் திருத்தம் செய்து தொகுக்கப் பயன்படும் விசைத் தொகுதி சில விசைப்பலகைகளில் இருப்பதுண்டு. விசைப்பலகையின் முதன்மைப் பகுதிக்கும் எண்விசைத் திண்டுவுக்கும் இடையில் இருக்கும். தொகுத்தல் விசைகள் மூன்று இணைகளாக இருக்கும். செருகு(Insert);நீக்கு(Delete);முகப்பு(Home);இறுதி (End);முந்தைய பக்கம்(Page Up);பிந்தைய பக்கம்(Page Down).

editing run:தொகுக்கும் ஓட்டம்;தொகுப்போட்டம்:தொகுதி முறை செயலாக்கத்தில்,தொகுப்பு நிரலாக்கத் தொடரானது தரவுகள் செல்லத்தக்கவைதானா என்பதை ஆராயும். எண்களும்,தரவுகளும் எதிர்பார்க்கப்பட்ட வரிசைகளில் இருக்கிறதா என்று பார்த்து,தனித்தனியாக நுழைக்கப்பட்ட அல்லது தொடர்முறையிலான கூட்டல்களைச் சோதித்து சோதனை இலக்கங்களை நிரூபித்து திருத்துவதற்கும்,மீண்டும் சமர்ப்பிப்பதற்கும் ஏற்ற பிழைகளை அடையாளம் காணுதல்.

editing terminal:திருந்து முனையம்;தொகுப்பு முனையம்.

edit instruction:தொகுப்பு அறிவுறுத்தம்:திரைக் காட்சிக்காக அல்லது அச்சடிப்பதற்காக