பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

edit routine

508

. edu


edit routine : தொகுப்பு வாலாயம் : தரவுவின் செல்லுந் தன்மையைச் சோதனை செய்கிற ஒரு செயல் வரைவிலுள்ள நிரல்கூறு.

edlin : எட்லின் : DOSஇல் பயன்படுத்தப்படும் பழைய வாசகத் தொகுப்பி.

edmonton. ca : எட்மான்டன். சிஏ : இணையத்தில், ஒர் இணையதள முகவரி கனடாவிலுள்ள எட்மான்டனில் உள்ளது என்பதைக் குறிக்கும் புவிப்பிரிவுப் பெருங்களப் பெயர்.

EDO DRAM : ஈடோ டிரோம் : நீட்டித்த தரவு வெளியீடு இயங்குநிலை குறிப்பின்றி அணுகு முகவரி என்று பொருள்படும்'Extended Data Out Dynamic Random Access Memory'என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டிரேமைவிட வேகமாகப் படிக்க முடிகிற ஒருவகை நினைவகம். முந்தைய சுழற்சியில் ஒரு விவரத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, புதிய படிப்புச் சுழற்சியைத் தொடங்க அனுமதிக்கும் செயல். இது, ஒட்டு மொத்தமாக கணினியின் செயல் திறனை அதிகமாக்கும்.

EDO RAM : ஈடோ ரேம் : நீட்டித்த தரவு வெளியீடு குறிப்பின்றி அணுகு நினைவகம் என்று பொருள்படும், Extented Data Out Random Access Memory என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இயங்குநிலை ரேமில் ஒருவகை. அடுத்த நினைவக அணுகல் தொடங்கும்போது, மையச் செயலகத்துக்குத் தகவலைத் தயாராக வைத்திருக்கும். இதனால் கணினிச் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கிறது. பென்டியம் கணினிகளில் இன்டெலின் டிரைட்டன் சிப்புத் தொகுதி மற்றும் டிரேம் உண்டு.

EDP : ஈடிபி : Electronic Data Processing என்பதன் குறும்பெயர்.

EDS : ஈடிஎஸ் : Exchangeable Disk Store என்பதன் குறும்பெயர்.

EDSAC : Electronic Delayed Storage Automatic Computer என்பதன் குறும்பெயர். சேமிக்கப்பட்ட நிரலாக்கத் தொடர் கோட்பாட்டை செயல்படுத்திய முதல் இலக்கமுறை கணினி. 1949இல் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.

. edu : . இடியு : இணையக் களப்பெயர் முறைமையில் உயர்நிலைக் களம். கல்வி