பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

adapter class

50

A-D converter


adapter class : ஏற்பி இனக்குழு.

adapter ROM : நினைவகம் தகவி;இயைபு நினைவகம் : தகவிச் சாதனத்தைக் கட்டுப்படுத்தும் குறியீட்டைக் கொண்ட நினைவகம். இது கணினி அமைப்பின் இயக்கத் திறனை அதிகரிக்கும். பல நிலை வட்டு இயக்கங்களில் ஏற்பு ரோம்கள் உள்ளன. ஸ்கஸ்ஸிப் புரவன் தகவி கூடுதல் நினைவகம், புறச் சாதனங்கள் அல்லது கூடுதல் நேரியல் அல்லது இணை நிலைத் துறை ஆகியவை தகவிச் சாதனங்களில் அடங்கும்.

adaptive : இயைபு.

adaptive allocation : இயைபு ஒதுக்கீடு.

adaptive answering : பிரித்தறி மறு மொழி;இயைபறி பதிலுரை : தொலைபேசி வழியாக வரும் அழைப்பு ஒரு தொலைநகல் கருவியிலிருந்து வருகிறதா அல்லது கணினியிலிருந்து வரும் தகவல் பரிமாற்றமா என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப புதிலிறுக்கும் ஒரு இணக்கியின் (modem) திறனைக் குறிக்கும்.

adaptive differential pulse code modulation : தகவேற்பு வேறுபாட்டுத் துடிப்புக் குறியீட்டுப் பண்பேற்றம் : இலக்க முறை கேட்பொலித் தகவலை இறுக்கிச் சேமிப்பதற்குப் பயன்படும் தருக்க முறை. கேட்பொலியின் ஒவ்வொரு துணுக்கையும் அப்படியே இலக்கமுறையில் சேமிக்காமல், ஒவ்வொரு துணுக்கும் அதன் முந்தைய துணுக்கிலிருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை மட்டும் பதிவு செய்யும் முறை.

adaptive interface : இயைபு இடைமுகம்.

adaptive routing : தகவுத் திசைவிப்பு;இயைபு வழியமைப்பு : மாற்று வழியமைப்புக்கு மாறானது. பிணையத் தரவு தொடர்பில் ஒவ்வொரு தடத்திலும் நடைபெறும் போக்குவரத்தைக் கண்காணித்து, எந்தத் தடத்தைப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யப்படுதல்.

adaptive system : இயைபுறு அமைப்பு;தகவுறு முறைமை : கற்கும் திறன், சூழலுக்கேற்ப அதன் நிலையை மாற்றிக் கொள்ளுதல் அல்லது ஒரு துண்டலுக்கு எதிர் வினையாற்றல் போன்றவற்றைக் கொண்ட கணினி அமைப்பு. சூழ்நிலையின் மாற்றங்களுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் கணினி அமைப்பு.

A-D converter : தொடர்முறை இலக்க முறை மாற்றி : தொடர்