பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

edutainment

509

effective address


நிலையங்கள் தம் தளப் பெயர்களில் பின்னொட்டாக இப்பெயரைச் சேர்த்துக் கொள்கின்றன. (எ-டு) www. annanuniv. edu. அமெரிக்காவில், பால்வாடி முதல் உயர்நிலைப்பள்ளிக் கல்வி வரை அளிக்கும் கல்விக் கூடங்கள், கே. 12. யுஎஸ் என்னும் உயர்நிலைக் களப்பெயரைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அல்லது வெறுமனே யுஎஸ் என்று பயன்படுத்துகின்றன.

edutainment : கல்வியேற்பு : கல்விச் சாதனங்களை ஏற்றுக் கொள்ளுதல். இது தொடர்பான மற்றொரு சொல்'தரவு ஏற்பு' (Infortainment).

EDVAC : எட்வாக் : Electronic Descrete Variable Automatic Computer என்பதன் குறும்பெயர். அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட சேமிக்கப்பட்ட நிரலாக்கத் தொடர் கொண்ட முதல் கணினி. 1951இல் ஜான் நியூமென் என்பவரால் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் மூர் மின்பொறியியல் கல்லூரியில் உருவாக்கப்பட்டது.

EEMS : இஇஎம்எஸ் : மேம்படுத்திய விரிவாக்க நினைவக வரன்முறை என்று பொருள்படும் Enhanced Expanded Memory Specification என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மூலமான விரிவாக்க நினைவக வரையறைகளை (EMS) மேம்படுத்தி உருவாக்கப்பட்டது. இஎம்எஸ்ஸின் 3ஆம் பதிப்பு தரவு சேமிப்பையும், நான்கு பக்கச் சட்டங்களையுமே (Frames) அனுமதிக்கும். ஆனால் இஇஎம்எஸ், 64 பக்கங்களை அனுமதிப்பதுடன் நிறைவேற்றப்பட வேண்டிய நிரலாக்கத் தொகுதிகளை விரிவாக்க நினைவகத்தில் இருத்தவும் அனுமதிக்கிறது. இஇஎம்எஸ்ஸின் சிறப்புக் கூறுகள் இஎம்எஸ் பதிப்பு 4. 0-வில் சேர்க்கப்பட்டுள்ளன.

EEPROM : ஈப்ரோம் : Electronically Erasable and Programmable Read Only Memory என்பதன் குறும்பெயர். மின்னோட்டத்தால் மாற்றத்தக்க படிப்பு நினைவகமாகும்.

EEROM : ஈரோம் : மின்சாரத்தால் அழுத்தி மீண்டும் நிரலாக்கத் தொடர் அமைக்கக் கூடிய சேமிப்புச் சாதனம்.

E-fax : மின் தொலைநகல்.

effective address : செயல்படும் முகவரி : ஒரு குறிப்பிட்ட முகவரியில் முகவரி மாற்றல் இயக்கத்தைச் செய்வதன் மூலம் கிடைக்கும் முகவரி.