பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

effective data transfer

510

egoless programming


effective data transfer rate : செயல்படு தரவு மாற்று வீதம்.

effectiveness : செயல்திறம் : விரும்பிய நோக்கத்திற்கேற்ப எந்த அளவுக்கு வெளியீடு சாதிக்கிறது என்பதைக் குறிப்பது.

effectors : அகவுணர்வி : உள்ளமைவுச் சூழல் மாற்றத்துடன் இடைத் தொடர்பு கொள்கிற சாதனங்கள்.

effects : விளைவு;செயல் விளைவு.

efficiency : இயக்குதிறம்;வினைத் திறன்.

efficient : செயல்திறன்மிக்க;செயலாற்றல் நிறைந்த.

e-form : மின்படிவம் : மின்னணுப் படிவம் என்பதன் சுருக்கம். ஒரு கணினிப் பிணையத்தில் இருக்கின்ற ஒரு வெற்றுப் படிவம். பயனாளர் ஒருவர் தேவையான விவரங்களை அப்படிவத்தில் நிறைவுசெய்து, உரிய நிறுவனத்துக்கு அப்பிணையம் வழியாகவே அனுப்பி வைக்க முடியும். இணைய நிறுவனங்கள் பலவும் தத்தமது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறவேண்டிய விவரங்களை இதுபோன்ற படிவங்கள் மூலம் பெறுகின்றன. இணையத்தில் பயன்படுத்தப்படும் மின்படிவங்கள் பெரும்பாலும் சிஜிஐ என்னும் உரைநிரல் மொழியில் உருவாக்கப்படுகின்றன. மறையாக்கம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.

EFT : ஈஎப்டி (மின்னணுவியல் நிதிப் பரிமாற்றம்) : Electronic Funds Transfer என்பதன் சுருக்கம். காசோலை போன்ற காகித ஊடகம் மூலமாக இல்லாமல் மின்னணுச் சாதனம் மூலம் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு மின்னணு நிதி மாற்றல் (EFT) மாற்றித் தருகிறது. அவ்வப்போது கட்டவேண்டிய பில்களுக்கு இம்முறை மிகவும் புகழடைந்து வருகிறது.

. eg : . இஜி : இணைய தள முகவரி எகிப்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் புவிப் பிரிவுப் பெருங்களப் பெயர்.

EGA : இஜிஏ (உயர் வரை கலைத் தகவமைவு) : Enhanced Graphics Adapter என்பதன் குறும்பெயர். IBM ஒளிப் பேழைக் காட்சி தர அளவு. இது, நடுத்தர உருச்செறிவு வாசகத்தையும் வரைகலையையும் அளிக்கிறது. இது முந்திய காட்சி முறைகளை ஆதரிக்கிறது. இதற்கு ஒர் இலக்க RGB தேவை.

egoless programming : ஆவணமற்ற நிரலாக்கத் தொடர்