பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

e-government

511

electrical communications


அமைத்தல் : நிரலாக்கத் தொடர் அமைப்பதை ஏற்பாடு செய்யும் ஒரு கோட்பாடு. இம்முறையில் வெற்றிக்கான பெருமை அல்லது தோல்விக்கான பழி ஒருவருக்கே போய்ச் சேராமல் பலர் பங்கிட்டுக் கொள்கின்றனர். அமைப்பு நடையோட்டம் மற்றும் பல தொழில் நுட்பங்களை இது பயன்படுத்துகிறது.

e-government : இணைய அரசு, மின் அரசு.

e-health care : மின் உடல்நலப் பாதுகாப்பு;இணைய நலப் பாதுகாப்பு.

EIA : இஐஏ : Electronic Industries Association என்பதன் குறும்பெயர்.

EIA interface : இஐஏ இடைமுகம் : நுண்கணினிகளுக்கும் வெளிப்புற உறுப்புகளுக்கும் இடையிலும், மோடெம்களுக்கும் முகப்புகளுக்கும் இடையிலும் உள்ள தரமான இடைமுகம்.

eight bit chip : எட்டுத் துண்மிச் சிப்பு : தரவுகளை ஒரு நேரத்தில் எட்டுத் துண்மிகள் என்ற வகையில் செயலாக்கம் செய்யும் மையச் செயலகச் சிப்பு.

eighty-column display : எண்பது, நெடுக்கை திரைக்காட்சி;எண்பது எழுத்துக் காட்சி.

elastic banding : நெகிழ்வுக் கட்டமைவு : கணினி வரைகலையில், திரையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு வரையப்படும் ஒரு கோட்டின் இயக்கம். இரண்டாவது புள்ளியை, ஒரு நுண் பொறியைப் பயன்படுத்தித் திரையில் நகர்த்தலாம். அந்தக் கோடு நெகிழ்வுப் பொருளால் செய்யப்பட்டது போன்று, கோட்டின் நீளத்தை நீட்டலாம் அல்லது சுருக்கலாம். இது கணினி அடிப்படையிலான வடிவமைப்புச் செயல் முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனை'ரப்பர் கட்டமைவு' (Rubber banding) என்றும் கூறுவர்.

elastic buffer : நெகிழ்வு இடைத் தடுப்பு : மாறுபடத்தக்க தரவு அளவினை, ஒரு குறிப்பிட்ட நேரத்தின் தேவைக்கேற்ப இருத்தி வைத்துக் கொள்கிற ஒர் இடைத் தடுப்பு.

electrical accounting machine : மின்னியல் கணக்கு வைப்பு எந்திரம் : நிரந்தரமாக மின் எந்திர முறையில் இயங்குகிற தரவு செய்முறைப்படுத்தும் சாதனம்.

electrical communications : மின் தகவல் தொடர்புகள் : ஒரு ஆரம்ப இடத்திலிருந்து தோன்றிய தரவை மின்சக்தியாக அல்லது புலங்களாக மாற்றி, மின்கட்ட