பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

electromagnetic delay line

513

electron beam deflection


பட்ட காந்தம். இதில், ஒரு கம்பிச்சுருள், ஓர் இரும்புத் தண்டின் மீது சுற்றப்படுகிறது. கம்பியில் மின்விசை பாயும் போது இரும்புத்தண்டு காந்தத் தன்மை பெறுகிறது.

electromagnetic delay fine : மின் காந்த சுணக்கச் சுற்று : தொடக்கக் கால கணினிகளில் பயன்படுத்தப்பட்டது. தாங்கிகளின் மூலம் மின்காந்த அலைகளைப் பரப்புவதனால் இயக்கப்படும் சுணக்கச் சுற்று.

electromagnetic disk : மின்காந்த வட்டு.

electromagnetic heads : மின்காந்த முனைகள்.

electromagnetic radiation : மின் காந்தக் கதிர்வீச்சு : மனிதர் உட்பட அனைத்துப் பொருள் களிலும் இருந்துவரும் ஆற்றல். இது மின்காந்த நுண்ணலைகள், காமாக்கதிர்கள், எக்ஸ்- கதிர்கள், புறஊதா ஒளி, கண்காணும் ஒளி, அகச்சிவப்பு ஒளி, ராடார் போன்றவற்றைத் தன்மய மாக்கிக் கொள்கிறது.

electromagnetic spectrum : மின்காந்த நிறமாலை : மின்காந்தக் கதிர்வீச்சு உருவடிவம்.

electromechanical : மின் எந்திர முறையிலான : மின்சாரமுறை எந்திரமுறை ஆகிய இரண்டு கொள்கைகளின் அடிப்படைகளைப் பயன்படுத்தி தரவுகளைச் செயலாக்கம் செய்யும் சாதனம் அல்லது அமைப்பு பற்றியது.

electro mechanical relay : மின் எந்திரவியல் அஞ்சல் : அசையும் உறுப்புகள் இறுதியில் தேய்ந்து போவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள, காந்த விசையால் இயக்கக்கூடிய எந்திரப் பொறியமைவு.

electrormotive force : மின்னியக்க விசை : ஒரு மின்சுற்று வழியிலுள்ள அழுத்தம். இது 'ஒல்ட்' (Volts) அலகுகளில் அளவிடப்படுகிறது.

electron : மின்னணு (எதிர்மின் னணு) எதிர்மின்மம் : ஓர் அணுவின் உட்கருவில் வட்டமிடுகிற அடிப்படைத் துகள்கள். எலெக்ட்ரான், எதிர்மின்னேற்றம் செய்யப்பட்டதெனக் கருதப் படுகிறது.

electron beam : மின்னணுக் கற்றை : ஓர் ஏற்புப் பொருள் மீது செலுத்தப்படுகிற எலெக்ட் ரான் அல்லது மின்னணுக் கற்றை.

electron beam deflection system : மின்னணு ஒளிக்கற்றை/விலகல் அமைப்பு : மின்சார அல்லது காந்தப் புலத்தின் தாக்கத்தினால்