பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

electronic circuit

515

electronic data interchange


elelctronic circuit : மின்னணுவியல் சுற்றுவழி : ஒருங்கிணைந்த மின்னணுவியல் அமைப்பிகளின் வரிசை. ஒரு பணியைச் செய்வ தற்கு ஒரு குறிப்பிட்ட தோரணியில் மின் விசை செலுத்தப்படுகிற ஒரு வழி இதுவாகும். இலக்க முறைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் மின்னணுவியல் சுற்று வழிகள், வெவ்வேறு ஈரிலக்க எண்களைக் கையாளுகின்றன. வானொலி, தொலைக்காட்சி போன்ற ஒத்தியல்புச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் மின்னணுவியல் சுற்று வழிகள், மின்னியல் அதிர்வுகளைக் (அலை வெண்கள்) கையாளுகின்றன.

electronic circuits : மின்னணுச் சுற்றுவழிகள் : மின்சுற்று வழிகள்.

electronic commerce : மின்னணு வணிகம் : கணினிப் பிணையம் வழியாக மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கை. மின்வணிகம், நிகழ்நிலை (Online) தரவு சேவை, இணையம் அல்லது அறிக்கைப் பலகைச் சேவை (BBS) ஆகியவற்றின் வழியாக ஒரு பயனாளருக்கும் ஒரு வணிக நிறுவனத்துக்கும் இடையே நடைபெறுவதாக இருக்கலாம். ஒரு வணிக நிறுவனத்துக்கும் அதன் வாடிக்கையாளருக்கும் இடையே, மின்னணு தரவு பரிமாற்றத் (EDI) தடங்கள் வழியாக நடைபெறும் எவ்வித வணிகத் தரவு பரிமாற்றமாகவும் இருக்கலாம்.

electronic computer : மின்னணுக் கணினி.

electronic content : மின்னணுவ உள்ளடக்கம் .

electronic cottage : மின்னணுக் குடிசை : மின்னணுக் குடில் : மைய அலுவலகத்துடன் தங்களது வீட்டிலிருந்தே கணினி மூலம் தொடர்பு கொண்டு வேலைகளைச் செய்யும் தொழிலாளர் பற்றிய கோட்பாடு.

electronic credit : மின்னணுப் பற்றுஇணையத்தின் வழியாக பற்று அட்டை பரிமாற்றங்கள் மூலம் நடைபெறும் மின் வணிக நடைமுறை.

electronic data change : மின்னணு தரவு மாற்றி.

electronic data interchange (EDI) : மின்ன ணுவியல் தரவு இடைப் பரிமாற்றம் (இடிஐ) : பற்றுச் சீட்டுகள், அனுப்பாணைகள் போன்ற வடிவங்கள் தொடர்பான தரவுகளை, நாடாப் பரி மாற்றம் அல்லது தொலைபேசி இணைப்புகள், மின்னணுவியல் அஞ்சல், கணினிகள் மூலமாக வழங்குகிற பொறியமைவு. ஒரு வணிக நடவடிக்கையை முடிவு