பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

electronic data processing

516

electronic funds transfer


செய்வதற்கு முன்பு கொள் வினையாளர்களும் பொருள் வழங்குவோரும் பல ஆவணங்களை முடிவுறுத்த வேண்டியிருக்கிறது. பன்னாட்டு வணி கத்தில், நாடுகளிடையிலான சுங்கவரி முனையங் கள் வணிக நடவடிக்கையைத் தாமதப்படுத்து கின்றன. இத் தாமதங்களை இந்த முறை தவிர்க் கிறது.

electronic data processing (EDP) : மின்னணு தரவு செயலாக்கம் : ' (இடிபி) இடிபி என்பது Electronic Data Processing என்பதன் குறும் பெயராகும். மின்னணு இலக்கமுறை கணினி போன்ற மின்னணுக் கருவியினால் பெருமளவு செய்யப்படும் தரவு செயலாக்கம்.

electronic data processing system : மின்னணு தரவு செயலாக்க அமைப்பு : மின்னணு வேகத்தில் மின்னணு மின் கற்று களைப் பயன்படுத்தும் எந்திரங்களைக்கொண்டு தரவு செயலாக்கம் செய்யும் அமைப்பு. மின் காந்தக் கருவிக்கு மாறானது.

electronic device : மின்னணுச் சாதனம்; மின்னணுக் கருவி.

electronic document : மின்னணு ஆவணம்.

electronic document distribution : மின்னணு ஆவணப் பகிர்மானம்.

electronic filing : கோப்பு அமைத்தல் : வட்டுகள் அல்லது நாடாக்களின் மீது மின்னணு முறையில் தகவலை எவ்வாறு கணினி அமைப்பு கள் சேமிக்கின்றன என்பதைக் குறிப்பிடுவது.

electronic frontier foundation : மின்னணு எல்லை நிதிய நிறுவனம் : கணினிப் பயனாளர் களின் பொது உரிமைகளைப் பாதுகாப்பதற் கென்றே உருவாக்கப்பட்ட, பொதுநல அமைப் பாகும். அமெரிக்காவில் சூதாட்டக்காரர்களிடம் இரகசியப் போலீசார் அதிரடிச் சோதனைகளை நடத்தி வந்தனர். அதனை எதிர்கொள்ள 1990ஆம் ஆண்டு மிட்சேல் கபூர், ஜான் பெர்ரி பார்லோ ஆகிய இருவரும் சேர்ந்து இந்த அமைப்பைத் தொடங்கினர்.

electronic funds transfer (EFT) : மின்னணு நிதி மாற்றல் (இஎஃப்டீ) : இஎஃப்டீ என்பது Electronic Funds Transfer என்பதன் குறும்பெயர். ரொக்கம் இல்லாத முறையில் சரக்கு கள் சேவைகளுக்குப் பணம் செலுத்துவது, பரிமாற் றத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு நபர்களுடைய கணக்குகளை மின்னணு முறையில் கணினி களைப் பயன்படுத்தி சரி