பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

electronic industries

517

electonic numeric integrator


செய்யப்படுகிறது. இன்சூரன்ஸ் பிரிமியம் போன்று அடிக்கடி கட்டப்பட வேண்டிய வற்றைக் கட்டுவதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

electronic industries association : மின்னணுத் தொழில்கள் சங்கம் : இஐஏ : இஐஏ (EIA) என்பது Electronic Industries Association என்பதன் குறும்பெயர். தகவல் வழங்குதலில் தர நிர்ணயம் உருவாக்கி, தகவலை வழங்கி, அரசுடன் தொடர்பு கொண்டு மக்கள் தொடர்பை கவனித்து வருகிற மின்னணு உற்பத்தி யாளர்கள் சங்கம்.

electronic journal : மின்னணு இதழ் : ஒரு கணினி அமைப்பு செய்கின்ற பணிகளை நேர் வரிசையில் தொகுக்கின்ற மின்னணுக் கோப்பு.

electronic magazine : மின்னணு இதழ் : 1. ஒளிநாடா அல்லது ஒளி வட்டு வடிவத்தில் வெளி யிடப்படும் பருவ இதழ். 2. ஒரு வகை மின்னணுப் பதிவு முறை.

electronic mail : மின்னணு அஞ்சல்; மின்ன ஞ்சல் : தொலைத் தகவல் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்தி இலக்கமுறை வடிவத்தில் செய்தி களை அனுப்பும் செயல் முறை. Email என்றும் அழைக்கப்படுகிறது.

electronic mail address : மின்னணு அஞ்சல் முகவரி;மின்னஞ்சல் முகவரி electronic mall : Slsinsurg) அங்காடி கணினிப் பிணையங் களில் குறிப்பாக இணையத்தில் நிகழ்நிலை வணிகச் செயல்பாடுகளின் மெய்நிகர் தொகுப்பு (Virtual Collection). ஒன்றையொன்று சார்ந்த வணிகச் செயல்பாடுகள் ஒன்று இன்னொன்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓர் இணைய தளத்தில் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும்.

electronic market place : மின்னணுவியல் அங்காடிக் கூடம் : தரவு பணியங்கள், ஒளிப் பேழை வாசகப் பணியங்கள் வாயிலாகக் கொள்வினை, விற்பனை செய்தல். எடுத்துக்காட்டு : ஆதாரம், கணினிப் பணியம்;அருந்திறல் பணி.

electronic messaging : மின்னணுவியல் செய்தியனுப்பீடு : இது, மின்னணுவியல் அஞ்சல் போன்றதேயாகும்.

electronic music : மின்னணு இசை : மின் இசை : மின்னணு முறையில் ஒலிகள் உருவாக்கப்படு கின்ற இசை

electronic numeric integrator and calculator (ENIAC) : மின்னணு எண்மான ஒருங்கிணைப்பி மற்றும் கணிப்பி.