பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

add data

51

add-on


முறைத் தரவுவை இலக்கமுறைத் தரவுவாக மாற்றும் சாதனம்.

add data : தரவு சேர்.

add data table : தரவு அட்டவணை சேர்.

add echo : எதிரொலி சேர்.

addend : கூட்டெண் : இரண்டு எண்களைக் கூட்டும்போது முதல் எண் கூட்டெண் என்று அழைக்கப்படும்.

addendum : சேர்ப்பு;பின்னிணைப்பு.

adder : கூட்டி : இரண்டு இரும எண்களைக் கூட்டப் பயன்படும் மின்னுறுப்பு.

adder, binary half : இரும அரைக் கூட்டி.

adder, half : அரைக் கூட்டி.

adder unit : கூட்டி அலகு : இரண்டு பல இலக்க இரும எண்களை ஏற்று அவற்றைக் கூட்டும் திறனுள்ள ஒரு மின்னணுச் சாதனம்.

add-in : கூடுதல் இணைப்பு : கணினியில் ஏற்கெனவே பொருத்தப்பட்ட அச்சிடப்பட்ட இணைப்புப் பலகையில் பொருத்தப்படக்கூடிய மின்னணு உறுப்பு. நுண் கணினியில் உள்ள காலியறைகளில் பொருத்தப்படக் கூடிய நினைவுச் சிப்புகள் ஒர் எடுத்துக்காட்டு.

adding machine : கூட்டல் எந்திரம்.

adding wheel : கூட்டல் சக்கரம் : பற்கள் உள்ள பல்லிணை (கியர்). இது எந்திரவியல் முறையில் கூட்டல் நடவடிக்கையை அனுமதிக்கிறது. பாஸ்கல் கணக்கிடு பொறியில் பயன்படுத்தப்படுகிறது.

add-in manager : கூடுதல் வசதி மேலாளர்.

add-in programme : சேர்ப்பு செய் நிரல்;கூடுதல் நிரல்.

addition : கூட்டல் : இரண்டு மதிப்புகளைக் கூட்டுதல்.

addition record : கூட்டிய ஏடு : கோப்பு ஒன்றினைக் கையாளும் பொழுது புதிய ஏட்டை உருவாக்குவதால் கிடைக்கும் ஆவணம்.

addition table : கூட்டல் அட்டவணை.

add method : கூட்டு வழிமுறை.

addnew hardware : புதிய வன்பொருள் சேர்.

add-on : திறனேற்றி : கணினி அமைவு ஒன்றுடன் அதன் கட்டமைவு அல்லது செயல் திறனை மேம்படுத்த அல்லது அதன் சேமிப்புத்திறனை அதிகரிக்கப் பொருத்தப்படும் துணைக் கருவி.