பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

electronic speech synthesis

519

electron tube


ஒரு தாரை விமானம் வானத்தில் விரைவாகச் செல்லும்போது விட்டுச் செல்லும் புகைத் தடங்கள்.

electronic speech synthesis : மின்னணு பேச்சு ஒருங்கிணைவு.

electronic spreadsheet : மின்னணு விரிதாள் : கணினி முகப்பை ஒரு பெரிய பேரேட் டின் தாளாக மாற்றும் கணினி நிரலாக்கத் தொடர். தொகுப்புப் பயனாளர் குறிப்பிடும் விதி களின்படி பெரிய நிரல்கள், நிரைகளில் எண்கள் மாறுவதை அனுமதிக்கிறது. ஒரு உள்ளீடு மாறும்போது மொத்த எண்களும் மாறும். கலவையான கணிப்பு களும் எண்முறை எதிர்பார்ப்புகளும் சோர்வடைய வைக்கும் மனித கணக்கீடுகள் இல்லாமல் செய்ய வைக்கும் முறை.

electronic station : மின்னணுவியல் நிலையம் : மின்னணுவியல் பரிசோதனைகளையும் ஆராய்ச்சிகளையும் நடத்துவதற்கான ஒரு பணி நிலையம்.

electronic storefront : மின்னனணுக் கடைமுனை : இணையத்தில் ஒரு நிறுவனம் தன்னுடைய விற்பனைப் பொருட் களைக் கடை பரப்பி வைத்து, வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதற்கு அல்லது நிகழ் நிலை விற்பனைக்கு வழி செய்தல்.

electronic table : மின்னணு வரை பட்டிகை.

electronic switch : மின்னணுவியல் விசை : மின்னோட்டத்தின் மூலம் தூண்டிவிடப்படும் தொகுப்பு/ விடுப்பு விசை.

electronic tablet : மின்னணுப் பலகை.

electronic text : மின்னணு உரை.

electronic text manipulation : மின்னணு வியல் வாசகக் கைத் திறன் : ஒரு சொல் பகுப்பியில் ஒரு வாசகத்தை அச்சிடுவதற்கு முன்பு அந்த வாசகத்தை உருவாக்கவும், பார்வையிடவும் பதிப்பிக்கவும் கையாளவும் உள்ள வசதிகள்.

electronic wand : மின்னணு ஒளிக்கோல்; மின்னணு மாத்திரைக் கோல்.

electron tube : மின்னணுக் குழாய் : மின்னணுச் சமிக்கைகளை அனுப்பவும், திறன் பெருக்கவும் பயன்படும் ஒரு சாதனம். உலோகத் தகடுகள் அல்லது வலைகள் போன்ற மின்னணு உறுப்புகள் உள்ளே பொருத்தப்பட்ட, உறையிடப் பட்ட கண்ணாடிக் குழாய்.