பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

electro photographic

520

electto sensitive psper


இப்போதெல்லாம் பல்வேறு கருவிகளில் மின்னணுக் குழாய் களுக்குப் பதில் மின்மப் பெருக்கிகளே (Transistors) பயன்படுத்து கின்றனர். என்றாலும், எதிர்மின் கதிர்க் குழாய் (Cathode Ray Tubes), வானொலி அலைமின் சுற்றுகள் மற்றும் கேட்பொலிப் பெருக்கிகளில் குழாய்களைப் பயன்படுத்துகின்றனர்.

electro photographic printers : மின் ஒளிப்பட அச்சுப்பொறிகள் : லேசர், எல்இடி, எல்சிடி, அயனிப்படிவு அச்சுப் பொறிகளை இந்த வகையில் சேர்க்கலாம். மின்னூட்டப்பட்ட ஒளி உணர்வுள்ள உருளை மீது எதிர்நிலைப் படிமம் ஒன்றைப் படிய வைப்பர். அப்படத்திற்கு ஏற்ப, ஒளி உணர்வுள்ள உருளை நிலை மின்னூட்டத்தை அதன் மேற்பரப் பில் உருவாக்கும். மைத் துகள் (Toner) அப்பரப்பில் ஒட்டிக் கொள்ளும். உருளை, மைத் துகளை தாளின் மீது பரப்பும். வெப்பமானது மைத் துகள்களை தாளோடு ஒட்டிக் கொள்ளச் செய்யும். உருளை யானது மின் தூண்டப்படும் முறையின் அடிப் படையில் அச்சுப்பொறிகள் வேறுபடுகின்றன.

electro photographing : மின்னியல் ஒளிப்படக்கலை. இது படியெடுப்பு எந்திர மற்றும் லேசர் அச்சடிப்பி அச்சடிப்பு உத்தியினைக் குறிக்கிறது. ஒளிப்புள்ளிக் குறிகளினாலான மறிநிலை உருக்காட்சி ஓர் ஒளியுணர்வுடைய வட்டுருளையில் அல்லது மின்னேற்றம் செய்யப் பட்ட பட்டையில் வண்ணம் பூசப்படுகிறது. ஒரு லேசரிலிருந்து அல்லது திரவப் படிகங்களிலிருந்து ஒளி வருகிறது. வட்டுருளையில் ஒளிபடும் இடத்தில் எல்லாம் மின்னேற்றம் நீக்கப்படுகிறது. ஓர் உலர் மையைப் பூசுவதன் மூலம் வட்டுருளையில் மின்னேற்ற மடைந்த பகுதிகளை அது ஒட்டிச் செல்கிறது. உலர் மையை வட்டுருளை காகிதத்திற்கு மாற்றிய பின்னர் அந்த மையினை யும் காகிதத்தினையும் அழுத்தமும் வெப்பமும் நிரந்தரமாக இணைக்கின்றன.

electroplating : மின்முலாம் பூச்சு : மின்பகுப்பு முறையில் ஓர் உலோகத் தகட்டின்மீது இன்னொரு வேதிப் பொருளின் மெல்லிய படுகையினை படியச் செய்தல்.

electro sensitive paper : மின் உணர்வுத் தாள் : அலுமினியம் போன்ற கடத்திப்பொருள் மெலி தாகப் பூசப்பட்ட அச்சிடும் காகிதம். கடத்தும்