பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

elevator seeking

523

ellipsis


அல்லது ஓர் படிமத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, முழுமையாகப் பார்த்தறிய கிடைமட்ட, செங்குத்து, உருள் பட்டைகளை (Scroll Bar) களைப் பயன்படுத்துகிறோம். உருள்பட்டையில் மேலும் கீழும் நகர்த்துமாறு அமைந்துள்ள ஒரு சதுரப் பெட்டி மேலேற்றி எனப்படுகிறது.

elevator seeking : மேலேற்றி தேடல் : ஒரு நிலைவட்டிலிலுள்ள தகவலைத் தேடிப் பெற பல்வேறு கோரிக்கைகள் எழும்போது, படிப்பு/எழுது முனைக்கு அருகிலுள்ள தரவு என்ற அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்தி செயலாக்கு வதன் மூலம், முனையின் இயக்கத்தைக் குறைப்பதுடன், நிலை வட்டின் அணுக்க நேரத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

eleven-punch : பதினோராவது துளை : ஹோலரித் துளையிடப்பட்ட அட்டையின் மேற்பகுதி யின் இரண்டாவது வரிசையில் போடப்படும் துளை.

elite : எலைட் 1. ஓர் அங்குல இடத்தில் 12 எழுத்துகள் அச்சிடும் வகையில் அமைந்த ஒரே அகலத்தில் அமைந்த எழுத்துருவின் உருவளவு எலைட் எனப்படுகிறது. 2. வெவ்வேறு உருவளவு களில் அமைகின்ற ஒரே அகல எழுத்துரு (Font) ஒன்றின் பெயர்.

elite type : எலைட் டைப் : பன்னிரண்டு எழுத்துகளும் ஒரு அங்குல அச்செழுத்தில் பொருந்துவது போன்ற அளவுள்ள அச்செழுத்து. பிகா (Pica) வுக்கு மாறானது.

eliza : எலைசா : (ஒரு மென் சாதனம்)  : ஒரு உளவியல் முறை மருத்துவரைப் போன்று செயல் படும், ஆரம்பகால இயற்கை மொழியைப் புரிந்து கொள்ளும் நிரலாக்கத் தொடர்.

ellipse : நீள்வட்டம் : நேர்க் கோடு ஆக்கப்பட்ட வட்டம் போன்ற வரைகணித உருவம். எல்லா கணினி வரைகலை அமைப்புகளிலும் நீளவட்டத் தை உருவாக்குவது ஒரு தானியங்கி செயல்முறை யாகும்.

ellipsis : முப்புள்ளி : 1. 905 விவரத்தை எழுதிச் செல்லும் போது அது முற்றுப் பெறாத நிலையில் முப்புள்ளி (...) இட்டு முடிப்பது வழக்கமாகும். முழுவதையும் சொல்லாமல் ஒரு பகுதியை மட்டும் சொல்லி நிறுத்திக்கொள்ளும் போதும் முப்புள்ளி இடுவோம். 2. விண்டோஸ் பயன்பாடுகளில் பட்டிப் பட்டையில் (Menu Bar) உள்ள விருப்பத் தேர்வுகளில் (Menu Options) முப்புள்ளி இடப்