பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ELM

524

e-mail address


பட்டதைத் தேர்வு செய்தால் ஓர் உரையாடல் பெட்டி தோற்ற மளிக்கும். 3. நிரலாக்கத்திலும், மென் பொருள் குறிப்பேடுகளிலும், ஒரு கட்டளை வரி யிலுள்ள முப்புள்ளி, கட்டளைக் கட்டமைப்பிலுள்ள சில உறுப்புகள் திரும்பத் திரும்ப இடம் பெறு வதைக் குறிக்கும்.

ELM : எல்ம்;இஎல்எம் : மின்னணு அஞ்சல் என்று பொருள்படும் Electronic Mail என்பதன் சுருக்கம். யூனிக்ஸ் இயக்க முறைமையில் மின்ன ஞ்சல் எழுதவும் படிக்கவும் பயன்படும் ஒரு நிரல். எல்ம் நிரல் ஒரு முழுத்திரை உரைத் தொகுப் பானைப் பெற்றுள்ளது. யூனிக்ஸிலுள்ள மெயில் நிரலைக்காட்டிலும் எளிதாகப் பயன்படுத்த முடிகிறது. ஆனால், பைன் (pine) என்ற மின்ன ஞ்சல் நிரலின் வருகைக்குப் பின் எல்ம் செல்வாக்கு இழந்தது.

else : மற்று : பல செயல் முறைப்படுத்தும் மொழிகளிலும், அறிவுறுத்தங்களிலும் நிபந்த னையைச் சரிபார்த்து முடிவெடுக்கும் கட்டளை அமைப்பில் பயன்படும் சொல். IF .... ΤΗΕΝ..... ELSE .... ENDIF

EM : எம் : அச்செழுத்துருக் கலையில், ஓர் அச்செழுத்தின் அலகு. இது, 'M'என்ற ஆங்கிலத் தலைப்பெழுத்தின் அகலத்திற்குச் சமமானது.

E-mail : மின் அஞ்சல் : 'Electronic Mail' என்பதன் குறும்பெயர். கணினி பயன்படுத்து பவர்களுக்கான தகவல் தொடர்பு சேவை. இம் முறையில் ஒரு மையக் கணினி அமைப்புக்கோ அல்லது மின்னணு அஞ்சல் பெட்டிக்கோ செய்திகள் அனுப்பப்பட்டு பின்னர் முகவரியிடப் பட்டவர் அதைப் பெற்றுக்கொள்வார்.

e-mail address : மின்னஞ்சல் முகவரி : மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும். முதலில் முகவரியாளரின் பெயர். அடுத்து இ என்னும் அடை யாளம். மூன்றாவதாக, இணையதளப் பெயரைக் கொண்டிருக்கும். அப்பெயரில் அஞ்சல் வழங்கன் (mail server) கணினியின் பெயர் மற்றும் களப் பெயர் இடம் பெற்றிருக்கும். (எ-டு) Jenny (3) md2. vsn!. net. in

       ஜென்னி என்பவர் விஎஸ்என்எல் என்ற நிறுவனத் தின் எம். டி2 என்னும் கணினியில் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்கிறார். net என்பது பெருங்களப் பெயர். in என்பது இந்தியா என்னும் நாட்டைக் குறிக்கும் புவிப்பிரிவுக் களப் பெயர். இம்முகவரியை, ஜென்னி