பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

E-mail filter

525

embedded hyperlink


அட் எம். டி2 டாட் விஎஸ் என்எல் டாட் நெட் டாட் இன் என்று உச்சரிக்க வேண்டும்.

E-mail filter : மின்னஞ்சல் சல்லடை : மின்னஞ்சல் வடிகட்டி மின்னஞ்சல் கிளையன் (Client) மென்பொருளில் இருக்கும் ஒரு வசதி. வருகின்ற அஞ்சல்களை பொருளடிப் படையில் பிரித்து வெவ்வேறு கோப்புறைகளில் சேமித்து வைக்கும். அன்பரசு மாமாவிடமிருந்து வரும் மடல்களை அன்பரசு என்னும் கோப்புறை யில் சேமிக்கலாம். அது மட்டுமின்றி, வேண்டாதவர் களிடமிருந்து வரும் மடல்களை வடிகட்டி நிறுத்திவிடும் சல்லடை வசதியும் உண்டு. balan@yahoo. com என்ற முகவரியிலிருந்து வரும் மடல்களைப் புறக்கணிக்குமாறு வடிகட்டி அமைக்க முடியும். அல்லது இன்னாரிடமிருந்து வரும் மடல் களை மட்டும் அனுமதிக்கு மாறும் வடிகட்டி அமைக்கலாம்.

E-mail greeting : மின்னஞ்சல் வாழ்த்துரை; பாராட்டுரை : வரவேற்பு.

embedded : உள்ளிடப்பட்ட : விதைத்த : மறைத்த.

embedded command : உள்ளிடப்பட்ட நிரல் : உட்பொதிந்த நிரல் : சொல் பகுப்பியில் ஒன்று அல்லது மேற்பட்ட எழுத்துகள் உரைநடையில் உள்ளே சேர்க்கப்படும். ஆனால் அவை, அச்சிடப் படுவதில்லை. பக்கத்தை முடி அல்லது ஒரு வரிசையை விட்டுச் செல் என்பது போன்ற சில பணிகளைச் செய்யுமாறு அச்சுப் பொறிக்கோ அல்லது சொல் பகுப்பு நிரலாக்கத் தொடருக்கோ ஆணையிடும்.

embedded chips : உட்பொதி சிப்புகள் : உள்ளமைச் சிப்புகள்.

embedded controller : உட்பொதி கட்டுப்படுத்தி : கணினியின் சாதனங்களை (நிலைவட்டு போன்றவை) இயக்குகின்ற இணைப்புக் கருவிகள் நுண் செயலிக்கு வெளியே தனிக் கருவியாகவே இருப்பதுண்டு. அப்படி இல்லாமல், அக்கருவியின் செயல்பாடுகளை செய லியே கவனித்துக் கொள்ளுமாறும் இப்போது மேம்பட்ட செயலிகள் உருவாக்கப்படுகின்றன. கட்டுப்பாட்டு மின்சுற்று நுண்செயலியில் உள்ளமைந்திருக்கும். இந்த மின்சுற்றுப் பலகை, கணினியில் உள்ளிணைக்கப்பட்டிருக்கும்.

embedded hyperlink : உட்பொதி மீத்தொடுப்பு : ஓர் உரை ஆவணத்தில் ஒரு வளத்துக்கான மீத்தெடுப்பு உரைகளுக்கிடையே