பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

enable

529

encrypt


என்பது, ஓர் எண்ணிலக்கத்தின் அகலமாகும்.

enable : இயலச் செய் : இயலுமைப்படுத்து ஒரு கணினி சாதனம் அல்லது வசதியை இயக்குவதற்கு ஒரு பொத்தானை அழுத்துதல்.

encapsulated postscript : பொதிவுப் பின்குறிப்பு : ஆவணங்களுக்கும் ஒளியியல் முன் னோக்கு உருக்காட்சிகளுக்குமான பின்குறிப்புக் குறியீட்டில் அடங்கியுள்ள பின்குறிப்புக் கோப்பு உருவமைவு. பின் குறிப்புக் குறியீடு, ஒரு குறிப்பு அச்சடிப்பானை நேரடியாக இயக்குகிறது. முன்னோக்கு உருவமைவுகள், திரையில் உருக் காட்சிகளைக் கையாள உதவுகின்றன. DOS, OS/2 கோப்புகள் இதனைப் பயன்படுத்துகின்றன.

encapsulation : பொதிவுறையாக்கம் : பொருள் சார்ந்த செயல்வரைவுகளில் தரவுகளையும், செயல் கூறுகளையும் ஒரு பொருளுக்குள் தனிமை யாக்குதல். இது, செயல்முறையில் வேறெங்கும் சிக்கல் ஏற்படாத வாறு மாற்றமைவு செய்ய அனு மதிக்கிறது. செய்தித் தொடர்பில், சட்டகத் தலைப் பினையும் தரவுகளையும் ஓர் உயர்நிலைப் படியிலிருந்து, ஒரு தாழ்நிலைப் படியின் தரவு சட்டகத்தினுள் நுழைத்தல் இதற்கு எடுத்துக்காட்டு.

enchancements : மேம்படுத்தல்கள் : மேம்பாடுகள் : கணினி அல்லது மென்பொருள் அமைப்பிற்கு வன்பொருள் அல்லது மென்பொருள் முன்னேற்றங் கள், கூடுதல்கள், அல்லது புதுப்பித்தல்கள் செய்தல்.

encipher : மாற்று : பழைய மாற்றல்களைச் சரிசெய்யாவிட்டால் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தரவுகளை மாற்றுதல்.

enclosure : தங்குமிடம் : கூடு : உறை : மின்சார அல்லது மின்னணுச் சாதனங்கள் வைக்கப்படும் இடம்.

'encode : குறியீடு அடை : குறியீடாக்கல் : கணினிக் கருவிக்கு ஏற்கும் வண்ணம் தகவல்களை ஒரு குறியீட்டு வடிவத்தில் மாற்றல்.

encoder : குறியீட்டுப்பொறி : குறியீடு ஆக்கி : மனிதர் இயக்கும் விசைப்பலகை மூலமோ அல்லது வேறு குறியீட்டில் பதிந்துள்ள தரவுகளிலிருந்தோ காகித நாடா போன்ற எந்திரம் படித்தறியும் வெளி யீட்டு வடிவில் உருவாக்கித் தரும் சாதனம்.

encrypt : மறையாக்கு.


34