பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

end effector

531

end-of-file mark


end effector:முடிவு உருவமைவுச் சாதனம்: எந்திர மனிதனைக் கையாளும் சாதனத்துடன் இணைந்த கரம்.இது 'முடிவு' உருவமைப்புச் சாதனம் அல்லது கைப்பிடி என்று அழைக்கப் படுகிறது.

endif:என்டிஃப்:நிபந்தனையைச் சரிபார்த்து முடிவெடுக்கும் கட்டளை அமைப்பில் இடம்பெறும் இறுதிச் சொல். IF ... THEN .... ELSE ..... ENDIF.

endless loop:முடிவற்ற வளையம்:முடிவிலாக் கணினி:இடையறாது திரும்பத்திரும்ப நிறை வேற்றப்படுகிற அறிவுறுத்தங்களின் வரிசை.இது, செயல் முறையில் ஒரு பிழையினால் உண்டாக லாம் அல்லது வேண்டுமென்றே ஏற்படுத்தப் படலாம்.

end key:'முடிவு' விரற்கட்டை அல்லது விசை:ஒரு சறுக்குச் சட்டத்தைக் கோட்டின் முடிவுக்கு சில செயல்முறைகள் மூலம் திரையின் அல்லது கோப்பின் அடிப்பகுதிக்கு அல்லது அடுத்த சொல்லுக்கு நகர்த்துவதற்குப் பொதுவாகப் பயன் படுத்தப்படும் விசைப் பலகையிலுள்ள விசை.

end mark:முடிவுக் குறி:இறுதிக் குறி:ஒரு கோப்பு அல்லது ஒரு சொல் செயலி ஆவணம் போன்ற ஏதேனும் ஒன்றின் இறுதியைக் குறிப் பிடப் பயன்படுத்தும் குறியீடு.

end note:முடிவுக் குறிப்பு.

end-of-block (EOB):தொகுதி முடிவு:ஒரு தொகுதியாக உள்ள நிரல் அல்லது நிரலாக்கத் தொடர் முடிதல்.இஓபி (EOB) என்ற குறும் பெயராலும் அழைக்கப்படும்.

end-of-file:கோப்பு முடிவு:ஒரு குறிப்பிட்ட அளவு தரவுகள் முடிதல் அல்லது முடியும் இடம். மின்காந்தக் கோப்புகளில் இத்தகைய இடத்தைக் குறிப்பிட கோப்பின் முடிவுக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

end of file table:கோப்பு முடிவுக் குறியீடு: முகப்புச் சீட்டு:கோப்பு முடிவு அடையாளக் குறி.

end-of-file mark:கோப்பு முடிவுக் குறி: ctrl மற்றும் 2 விசைகளை ஒரு சேர அழுத்து வதன் மூலம் பெறப்படும் 'Z' எழுத்து.DOS இதனை எதிர் நோக்கும்போது அதன் பிறகு ஒரு தரவு கோப்பில் வேறெதையும் படிப்பதில்லை.MS-dosஇன் கீழ் பணியாற்றும்போது.F6-ஐ அழுத்துவதன் மூலம் இந்த எழுத்து உண்டாக்கப்படுகிறது.