பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

end statement

533

energy star


வரைகலையில், முடிவு முனை ஒவ்வொன்றும் x, y அச்சுகளின் மீதான ஆயத்தொலைவுகளைக் குறிக்கும் இரு எண்கள். முப்பரிமாண வரைகலையில் முடிவு முனை ஒவ்வொன்றும் x, y, z அச்சுகளின் மீதான ஆயத் தொலைவுகளைக் குறிக்கும் மூன்று எண்களினாலானது.

end statement : முடிவுறுத்தல் கட்டளை.

end-to-end control : இறுதி முடிவு கட்டுப்பாடு.

end user : இறுதிப் பயனாளர் : கணினி அமைப்பையோ அதன் வெளி யீட்டையோ பயன்படுத்தும் ஒரு நபர்.

end-user computing : இறுதிப்பயனாளர் கணிப்பணி.

end user license agreement : இறுதிப் பயனாளர் உரிம ஒப்பந்தம் : ஒரு மென்பொருள் தயாரிப்பாளருக்கும், அந்த மென்பொருளை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துபவருக்கும் இடையே வினியோகம், மறு விற்பனை, கட்டுப்படுத்தப் பட்ட பயன்பாடு போன்றவை தொடர்பாக ஏற்படுத்திக் கொள் ளும் சட்டமுறையான ஒப்பந்தம்.

end-user system : இறுதிப்பயனாளர் முறைமை.

energy star : ஆற்றல் நட்சத்திரம்;ஆற்றல் விண்மீன் : கணினியை இயக்கி வைத்து விட்டுப் பணிபுரியாமல் இருக்கும் நேரத்திலும் காட்சித்திரை, நிலைவட்டு, நுண்செயலி, தாய்ப்பலகை ஆகியவை மின்சக்தியைச் செலவழித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதனால் வீணாகும் மின்சாரம் ஏராளம். அமெரிக்க நாட்டில் அனைத்துக் கணினிகளிலும் பணிபுரியாதபோது வீணாகும் மின்சாரத்தை சேமிக்க முடிந் தால் மூன்று பெரும் அணுமின் நிலையங்களை மூடிவிடலாம் என்று ஒரு கணக்கெடுப்புக் கூறுகிறது. இந்நிலையை மாற்ற அமெரிக்க அதிபர் கிளின்டன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையிடம் ஒரு மாற்றுவழி காணச் செய்தார். அவர்களின் திட்டப்பணி அடிப்படையில், கணினியில் பணியாற்றாதபோது மிகக்குறைந்த அளவு மின்சாரமே செலவாகுமாறு கணினி உற்பத்தியாளர்கள் பணிக்கப் பட்டனர். கணினி இயக்க நிலையில் பணிபுரியாதபோது தாய்ப்பலகை, நுண்செயலி, நிலை வட்டு, காட்சித்திரை ஆகியவை 50 விழுக்காடு மின்சாரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளுமாறு கணினிகள் வடிவமைக்கப் பட்டன. காட்சித்திரை குறிப்