பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

enterprise computing

537

entity type


படும் ஒரு புறச்சேமிப்புச் சாதனம் உள்ள ஒரு பகுப்பி.

enterprise computing : தொழிலகக் கணிப்பணி;தொழில்துறை கணினிச் செயலாக்கம் : பெருந்தொழில் நிறுவனங்களில் கணினிப் பிணையங்கள் அல்லது பல்வேறு பிணையங்களின் ஒருங்கிணைப்பு மூலம் கணினிச் செயல்பாடுகளை மேற்கொள்ளல். பெரும்பாலும் அத்தகைய பிணையங்கள் வேறுபட்ட பணித்தளம், வேறுபட்ட இயக்க முறைமை/நெறிமுறைகளைக் கொண்டவையாகவும், வேறுபட்ட பிணையக் கட்டமைப்புகளைக் கொண்டவையாகவும் இருப்பதுண்டு.

enterprise data : தொழில் முனைவுத் தரவு : அமைவனம் முழுவதிலு முள்ள பல பயனாளர்கள் பகிர்ந்து கொள்ளும் மையப்படுத்திய தரவுகள்.

enterprise model : தொழிலக மாதிரியம்.

enterprise network : தொழிலகப் பிணையம் : பெருந் தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் கணினிப் பிணையம் அல்லது பிணையங்களின் ஒருங் கிணைப்பு. அத்தொழில் நிறுவனத்தின் பல்வேறு கணினிச் செயலாக்கத் தேவைகளை நிறைவு செய்வதாக அது இருக்கும். இத்தகைய பிணையம் பெரும்பாலும் விரிந்து பரந்த புவி எல்லைகளைக் கொண்டிருக்கும். வேறுபட்ட பணித்தளம், இயக்க முறைமை/நெறிமுறை/பிணையக் கட்டமைப்புக் கொண்டவையாக இருக்கும்.

enterprise scheme : தொழிலகத் திட்டமுறை.

entertreturn key : நுழை/திரும்பு விசை.

entire column : நெடுக்கை முழுதும்.

entire row : கிடக்கை முழுதும்.

entity : உட்பொருள் : ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு உட்பொருளைக் கொண்டுள்ள ஒரு பொருள்.

entity life history : உட்பொருள் வாழ்க்கை வரலாறு.

entity model : உட்பொருள் மாதிரியம்.

entity relationship model : உட்பொருள் உறவுமுறை மாதிரியம்.

entity sub type : உட்பொருள் துணை வகை.

entity type : உட்பொருள் வகை : ஒரு தரவுத் தளத்தில், உள்ள ஒரு வகைக் கோப்பு. எடுத்துக்காட்டு : வாடிக்கையாளர் கோப்பு;உற்பத்திப் பொருள் கோப்பு.