பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

entropy

538

envelopes and lables


entropy : செறிவளவு : தரவு செறிவாக்கத்தில், ஒரு பொருளிலுள்ள மிகையில்லாத, செறிவாக்கம் செய்ய முடியாத தரவுகளின் அளவு.

entry : நுழைவு;உள்ளிடு : மின்னணு விரிதாளில், ஒரு குறிப்பிட்ட அறையில் உள்ள தகவல் அல்லது மதிப்பு.

entry point : நுழைவுப் பகுதி;நுழைவிடம் : ஒரு வழக்கச் செயலின் பகுதி. வேறொரு வழக்கச் செயலில் இருந்து இதற்கு கட்டுப்பாடு அனுப்பப் படும். மாற்றல் முகவரி என்றும் குறிப்பிடப்படும். நிரலாக்கத் தொடரில் முதலில் செயல் படுத்தப்படும் நிரல்.

enumerate : கணக்கீடு : ஒன்றன்பின் ஒன்றாகக் கணக்கிடுதல் அல்லது பட்டியலிடுதல். கணக்கிட்ட தரவு வகையானது, ஒரு மாறியல் மதிப்புருவின் நிகழ்தகவு மதிப்பளவுகள் அனைத்தின் ஒரு பட்டியலை வரையறுக்கிறது.

enumerated data type : எண்ணிட்ட தரவு இனம்;பெயர் மதிப்பெண் தரவு இனம் : கணினி மொழிகளில் பல்வேறு தரவு இனங்கள் கையாளப்படுகின் றன. முழுஎண் (Integer) மெய் எண் (Real), எழுத்து (Character), சரம் (String), தேதி (Date), ஆமில்லை (Boolean) போன்றவை அவற்றுள் சில. சில வேளை களில் 1, 2, 3.... போன்ற எண் மதிப்புகளுக்குப் பதில் Sun, Mon, Tue என்றோ Jan, Feb, Mar ... என்றோ பெயர் மதிப்புகளைப் பயன்படுத்துவது நிரலாக்கத் தில் எளிதில் புரியும்படி இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளில் பெயர் மதிப்புகளைக் கொண்ட எண் விவர இனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். (எ-டு), enum day (Sun, Mon, Tue ...) enum month (Jan, Feb, Mar ...) இங்கே, Sun, Mon ... Jan, Feb, ... ஆகியவை பெயர் மதிப்பாக இருந்த போதிலும், கணினி அவற்றை 0, 1, 2, 3 என்றே எடுத்தாளும்.

enumeration : கணக்கிடுதல் : முறையாக உருவாக்கிய ஒரு பட்டியல்.

envelope : உறையீடு : ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டின் அதிர்வெண்களின் வீச்செல்லை. தனியொரு அலகாகத் தொகுக்கப்பட்டுக் கையாளப்படும் துணுக்குகளின் அல்லது இனங்களின் குழுமம்.

envelopes and lables : உறைகளும் முகப்புச் சீட்டுகளும்;உறைகளும் சட்டைகளும்;உறைகளும் முகவரிச் சிட்டைகளும்.