பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

address, direct

53

address mask


எண்களால் குறிக்கப்பட்டிருக்கும் ஒரு நினைவக முகவரியை, ரேம் சில்லுகளிலுள்ள நினைவக இருப்பிடங்களைத் தேர்வு செய்யும் வகையாக மாற்றித் தரும் ஒரு மின்னணுச் சாதனம்.

address, direct : நேரடி முகவெண்;நேரடி முகவரி.

address field : முகவெண் புலம்.

address format : முகவரி வடிவம் : முகவரியைக் குறிப்பிடும் முறை.

address, indirect : மறைமுக முகவெண்;மறைமுக முகவரி.

addressing : முகவரியிடல் : (1) குறிப்பிட்ட உத்திகள் மூலம் தேவையான தரவுகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணல். (2) தரவு அனுப்பும் கணினி மற்றொரு குறிப்பிட்ட முனையத்துக்கான தரவு, தன்னிடம் இருப்பதைக் குறிப்பிடும் தரவுத் தொடர்பு கட்டுப்பாட்டு முறை.

addressing, absolute : முற்று முகவெண்ணிடல்;முற்று முகவரியிடல்.

address, instruction : முகவெண்;அறிவுறுத்தல்;ஆணை முகவரி; அறிவுறுத்த முகவரி.

addressless instruction formate : முகவரியிலா கட்டளை வடிவம்.

address, machine : எந்திர முகவெண், பொறி முகவரி.

address management : முகவரி மேலாண்மை : முகவரி எண்களைக் கொண்ட தரவுத் தளம் அமைக்க உதவும் மென்பொருள்.

address mapping : முகவரி காணல் : ஒரு விவர சேமிப்பு இருப்பிடத்தின் சரியான முகவரி எண்ணைக் கண்டுபிடித்தல்.

address mapping table : முகவெண் பதிலீட்டு அட்டவணை : கணினிப் பிணையங்களில் குறிப்பாக இணையத்தில் திசைவிகளிலும் (routers), களப் பெயர் வழங்கன் கணினிகளிலும் (domain name servers) பயன்படுத்தப்படும் அட்டவணை. உரை வடிவில் (எழுத்துகளில்) அமைந்துள்ள ஒர் இணைய தளத்தின் களப்பெயரை, இணைய நெறிமுறை முகவரியாகப் (internet protocol address) பதிலீடு செய்யப்பட்ட விவரங்கள் அந்த அட்டவணையில் இருக்கும். எடுத்துக்காட்டாக, md2. vsnl. net. in என்ற இணைய தளமுகவரி இணையான 202. 54. 1. 30 என்னும் ஐபீ முகவரி அவ்வட்டவணையில் இருக்கும்.

address mask : முகவெண் மறைப்பான்;முகவரி மறைப்பு :