பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

environment

539

ΕΡRΟΜ


environment : சூழ்நிலை;சூழல் : கணினிப் பின்னணியில் நேரப் பங்கீட்டுச் சூழ்நிலை போன்ற இயக்க முறையைக் குறிப்பிடுகிறது. வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவற்றை இது அவ்வளவாகக் குறிப்பிடுவதில்லை. ஆனால், இரண்டு வகையான சூழ்நிலையும் கணினி இயக்கத்தின் திறனைப் பாதிக்கக் கூடியவை.

environment division : சூழல் பகுதி : கோபால் நிரலாக்கத் தொடரின் நான்கு பகுதிகளில் இரண்டாவது பகுதி.

environment variable : சூழல் மாறியல் மதிப்புரு : DOS சூழல் இடைவெளியிலுள்ள எழுத்துகளின் ஒரு குழுமம். இதற்கு ஒரு மதிப்பளவு குறித்தளிக்கப் படுகிறது.

EOB : இஓபி : End of Block என்பதன் குறும்பெயர்.

EOF : இஓஎப்;கோப்புறுதி : End of File என்பதன் குறும்பெயர். ஒரு கோப்பில் உள்ள எல்லா பதிவேடுகளும் செயலாக்கம் செய்யப்பட்டு விட்டபின், கோப்பின் இறுதிநிலையை கணினி அடைந்து விட்டதாகப் பொருள்.

EOF exception : ஈஓஎப் விதிவிலக்கு.

EOJ : இஓஜெ : End of Job என்பதன் குறும்பெயர்.

EOLN : இஓஎல்என் : End of line என்பதன் குறும்பெயர். ஒருவரியில் உள்ள தரவுகள் முடிவதைக் குறிப்பிடும் கொடி. EOL என்றும் சிலசமயம் சுருக்கப்படும்.

EOM : இஓஎம் : end of message என்பதன் குறும்பெயர்.

EOT : இஓடி : End of Transmission என்பதன் குறும்பெயர்.

epitaxial layer : எபீடேக்ஸியல் படுகை அல்லது அடுக்கு : குறை கடத்திகளில் கீழடுக்கின் திசையிலேயே அமைந்துள்ள படிகப்படுகை.

EPO : இபிஓ (அவசர மின்துண்டிப்பு) : Emergency Power off என்பதன் குறும்பெயர். அவசர நிலையில் மின்சுற்றும் அதனை இயக்கும் பொத் தான்களும் முழுகணினியையும் நிறுத்தி விடக்கூடும். ஒரு பெரிய கணினி அமைப்பில் இருபது வரையிலான இபிஒ பித்தான்கள் இருக்கக்கூடும்.

ΕΡRΟΜ : இப்ரோம்;அழித்தெழுது படிப்பு நினைவகம் : Erasable Programmable Read Only Memory என்பதன் குறும்பெயர். அதிக அடர்த்தியுள்ள அல்ட்ரா வயலட் ஒளியில் அழித்து