பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

EPROM eraser

540

equal priority


மீண்டும் நிரலாக்கத் தொடர் அமைக்கக் கூடிய சிறப்பு ரோம் (PROM).

EPROM eraser : இப்ரோம் அழிப்பி : எழுதிப்படிப்பதற்கு மட்டுமேயான நினைவுப் பதிப்பியில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு செயல் முறையை அழிப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு ROM சிப்புகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம்.

EPROM programmer : இப்ரோம் நிரலாக்கத் தொடர் : இப்ராம் (EPROM) சிப்புகளுக்கு நிரலாக்கத் தொடர் அளிக்கப் பயன்படும் சிறப்பு எந்திரம்.

EPS : எப்ஸ்;இபீஎஸ் : பொதியுறையிட்ட போஸ்ட் ஸ்கிரிப்ட் என்று பொருள்படும் Encapsu-lated Post Script என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு போஸ்ட் ஸ்கிரிப்ட் கோப்பு வடிவாக்கம், ஒரு தனித்த உள் பொருளாகப் பயன்படுத்த முடிகின்ற கணினிப்பதிப்பகப் பயன்பாடுகளில் (Desktop Publishing Applications) இபீஎஸ் பட உருக்கள் போஸ்ட் ஸ்கிரிப்ட் வெளியீட்டுடன் உடன் சேர்க்கப்பட வேண்டும்.

EPSILON : இப்சிலான் : ஒன்றின் சிறிய அளவு.

EPSON : இப்சன் : வரைகலையையும் வாசகங்ளையும் அச்சிடக் கூடிய ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் அச்சடிப்பி.

epson emulation : இப்சன் முன்மாதிரி : ஒத்தியல்பு இப்சன் புள்ளிக்குறி வார்ப்புரு அச்சடிப்பிகள். இப்சன் Mx, Rx, Fx, அச்சடிப்பிகளிலுள்ள நிரலாக்கத் தொகுதி, ஒரு தொழில் துறைத் தர அளவாக உருவாகியுள்ளது.

EPSON printer : இப்சன் அச்சடிப்பி : ஜப்பானிலுள்ள இப்சன் கழகம் என்ற அமைவனம் தயாரிக்கும் உலகப் புகழ்பெற்ற அச்சடிப்பி வகை. இது புள்ளிக்குறி வார்ப்புரு அச்சடிப்பிகளையும், மை தூவு அச்சடிப்பிகளையும் லேசர் அச்சடிப்பிகளையும் தயாரிக்கிறது.

e-publishing : மின்னணுப்பதிப்பு : மின்பதிப்பு.

equality : சமம்;சமத்துவ நிலை : சமன்பாடு குறியீட்டினால் உணர்த்தும் கருத்து. பல நிரலாக்கத் தொடர் மொழிகளிலும், வடிவமைப்புகளிலும் பயன்படுத்தப்படுவது. மாற்றாக அமைக்கப்படும் குறியீடாகவும் சமன்பாடு குறியீடு பயன் படுத்தப்படுகிறது.

equal priority : சம முன்னுரிமை.