பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ergonomics

542

error checking


யைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி கையை இங்குமங்கும் நகர்த்திக் கொண்டேயிருப்பதால் கைமுட்டிகளும், மணிக்கட்டும் பழுதடைய வாய்ப்புண்டு. இவற்றைக் குறைக்க ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விசைப்பலகையில் விசைகள் வேறு வகையில் அமைக்கப்பட்டிருக்கும். கைகளை சிரமமின்றி இயல்பாக வைத்துக்கொள்ள வசதியிருக்கும்.

ergonomics : சூழலியல் : மனிதர்களுக்கும் அவர்களது பணிச் சூழலுக்கும் இடையிலுள்ள பருப்பொருள் உறவை ஆராய்தல். அதிகத்திறன், நல்ல உடல்நலம் போன்ற பொதுநலனுக்காக இயக்குபவர்களின் வசதிக்காக எந்திரங்களை மாற்றுதல். விசைப்பலகைகளில் உள்ள எண் விசைகள் பிரிக்கக் கூடிய விசைப் பலகைகள், தலைப்பு காட்டும் திரை போன்றவை இது தொடர்பான நல்ல முடிவுகள்.

erlang : எர்லாங்க் : ஒர் தொலைபேசிப் பொறியமைவில் மொத்தத் திறம்பாட்டினை அல்லது சராசரிப் பயன்பாட்டினை குறித்துரைக்கிற போக்குவரத்துப் பயன்பாட்டு அலகு. ஒர் 'எர் லாங்க்' என்பது ஒரு தொலை பேசி இணைப்பின் தொடர்ச்சியான பயன்பாட்டுக்குச் சமம். அனைத்து இணைப்புகளின் இயங்கு நேரங்களின் கூட்டுத் தொகையினை அளவீட்டுக் கால அளவினால் வகுத்துக் கிடைக்கும் ஈவுதான் எர்லாங்க் அலகுகளின் போக்குவரத்து அலகாகும்.

EROM : இரோம் : Erasable Read Only Memory என்பதன் குறும்பெயர்.

error : பிழை;தவறு : கணினி அல்லது சரியானதை அளந்த தன்மை அல்லது உண்மை மதிப்பிலிருந்து விலகிச் செல்வது. fault, malfuncion, mistake இவைகளுடன் வேறுபடுத்துக.

error, absolute : முற்றுப் பிழை.

error, ambiguity : மயக்குறு பிழை.

error analysis : பிழை ஆய்வு;பிழை பகுப்பாய்வு : எண்முறை ஆய்வு நடைமுறைகளில் பிழையின் பங்கை ஆராயும் எண் ஆய்வு தொடர்பான துறை. கணிப்பு கணிதத்தின் வினோதத் தன்மை காரணமாக கணிப்பில் ஏற்படும் பிழைகளை ஆராய்வதையும் குறிப்பிடுகிறது.

error checking : பிழை சோத்த்தல் : 1. தரவுகளின் செல்லத்தக்க நிலையைச் சோதிப்பதற்கான