பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

error code

543

error file


பல்வேறு தொழில்நுட்பங்கள். 2. தொலைத் தரவு தொடர்புகொள்ளும் இரண்டு கணினிகள் தாங்கள் பெற்ற தகவல்,பிழை இல்லாதது என்று சோதித்துக்கொள்ளும் செயல்முறை.

error code"பிழைக் குறிமுறை: தவறான குறிமுறை.

error control:பிழை கட்டுப்பாடு:செய்தித் தகவல் தொடர்பு அமைப்பில் ஏற்படும் பிழைகளைக் கண்டுபிடிக்கவோ அல்லது திருத்தவோ மென்பொருள் அல்லது வன்பொருள் அமலாக்கப்படும் திட்டம்.

error-correcting code:பிழைத் திருத்தக் குறியீடு:பிழை திருத்தும் குறிமுறை:ஒரு துணுக்கின் ஈட்டத்தினால் அல்லது இழப்பீட்டினால் ஏற் படும் தடைசெய்யப்பட்ட துடிப்புகளின் இணைப்பிலுள்ள குறியீடு. இது எது தவறானது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

error correction:பிழை திருத்தம்:தரவு அனுப்பப்படும் கருவிகளில் பிழைகள் ஏற்பட்டால் தானாகவே கண்டு பிடித்து திருத்தம் செய்யும் உள்ளார்ந்த அமைப்பு.

error-correction coding:பிழை திருத்தும் குறியீடு:ஒரு தகவலை குறியீட்டு முறையில் மாற்றியமைத்து (encoding) அனுப்பி வைக்கும்போது அதிலுள்ள பிழைகளைக் கண்டறிந்து திருத்தும் திறனுள்ள குறியீட்டு முறை. அதிகப் பட்சமாய் எவ்வளவு பிழைகளைக் கண்டறியும்,எவ்வளவு பிழைகளைத் திருத்தும் என்பதன் அடிப்படையில் குறியீட்டு முறை வகைப் படுத்தப்படுகிறது.

error-detecting code:பிழையறியும் குறியீடு;பிழையறியும் குறிமுறை: ஒவ்வொரு தொடரும் குறிப்பிட்ட கட்டுமான விதிகளுக்கு இணங்க இருக்கு மாறு செய்கிற குறியீடு.

error detection and correction:பிழை கண்டறிதல்;திருத்துதல்:ஒரு கோப்பினைக் கணினி மூலமாய் ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு அனுப்பி வைக்கும்போது,அதிலேற்படும் பிழைகளைக் கண்டு பிடித்துத் திருத்தும் முறை. சில நிரல்கள் பிழைகளைக் கண்டறிய மட்டும் செய்யும். இன்னும் சில கண்டறிந்து அவற்றைத் திருத்தவும் செய்யும்.

error diffusion:பிழைபரவல்.

error file:பிழைக் கோப்புகணினியால் கண்டுபிடிக்கப்பட்ட பிழையை நிறுத்திவைக்க செயலாக்கத்தின் மீது உருவாக்கப்படும் கோப்பு.