பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

error free

544

escape character


error free : பிழை இலா;பிழை அற்ற;தவறு அல்லாத.

error-free channel : பிழையிலா வழி : புறநிலைக் குறுக்கீடுகளுக்கு உள்ளாகாதிருக்கிற சாதனங்களுக்கிடையிலான கம்பி, கம்பிவடம் போன்ற இடைமுகப்பு.

error guessing : பிழை ஊகித்தல் : சோதனைத் தரவு தேர்வு தொழில் நுட்பம். பிழைகள் ஏற்படுத்தக்கூடிய மதிப்புகளைக் கண்டுபிடிப்பதே தேர்வு விதி முறை.

error handler : பிழை கையாளி.

error handling : பிழை கையாளல் : விசைப்பலகை இயக்குபவர் தவறான விசையை அழுத்திவிட்டால் ஏற்படும் பிழையைக் குறைக்கும் நிரலாக்கத் தொடரின் செயல்.

error, inherited : மரபுவழிப் பிழை.

error list : பிழைப் பட்டியல்.

error, logical : தருக்கப் பிழை.

error message : பிழைச் சுட்டும்;தவறு சுட்டும் செய்தி : கணினி ஒரு பிழையையோ அல்லது எந்திரக் கோளாறையோ கண்டுபிடித்து விட்டது என்பதைக் குறிப்பிடும் அச்சிட்ட அல்லது காட்டப்பட்ட சொற்றொடர்.

error rate : பிழை விகிதம்;பிழைவீதம் : செய்தித் தகவல் தொடர்களில், மின்சுற்றுக் கருவியின் தரத்தின் ஒரு அளவு. ஒரு மாதிரி பகுதியில் உள்ள பிழையான துண்மிகள் அல்லது எழுத்துகள்.

error ratio : பிழை விகிதம் : மொத்த தரவு அலகுகளில் பிழையான தகவல் அலகுகளின் விகிதம்.

error register : பிழைப் பதிவேடு.

error report : பிழை அறிக்கை.

error routine : பிழை நிரல்கூறு.

error, run time : இயக்க நேரப்பிழை.

error, single bit : ஒற்றை பிட் பிழை.

error transmission : பிழை அனுப்பீடு;தவறான செலுத்துகை;பிழை அனுப்புதல் : பிழை பரவல் : அனுப்பும் செயலின்போது தரவுகளில் ஏற்படும் மாற்றம். உள்ளே விழுதல் அல்லது வெளியே விழுதல்.

error, truncation : துணிப்புப் பிழை.

escape character : இடர்பிழைப்பு எழுத்து : முந்திய எழுத்துகளிலிருந்து மாறுபட்டுப் பொருள் கொள்ள இடமளிக்கும் ஒர்