பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. et

547

evaluation


. et : இடீ : இணையத்தில் ஓர் இணைய முகவரி. எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்தது என் பதைக் குறிக்கும் புவிப்பிரிவு பெருங்களப் பெயர்.

ETB : இடீபி : 'அனுப்பீட்டுத் தொகுதி முடிவு' என்று பொருள்படும் "End of Transmission Block" என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

etching : செதுக்கல்;பொறித்தல்.

ΕΤΕ business solution : வணிகத் தீர்வு : விரைவாக விரிவடைந்து வரும் கணினி மென் பொருள் சாதனம் உருவாக்கும் அமைவனம்.

e-text : மின்னுரை : மின்னணு உரை என்பதன் சுருக்கம். மின்னணு ஊடகத்தில் நிகழ்நிலையில் (on - line) கிடைக்கும் ஒரு புத்தகம் அல்லது உரை அடிப்படையிலான ஆவணம். மின்னுரையை நிகழ்நிலையில் படிக்க லாம். அல்லது பயனாளரின் கணினியில் பதிவிறக்கி அகல் நிலையில் (off line) படித்துக் கொள்ளலாம்.

ethernet : கணிப்பொறி உள்வளாக இணைப்பு : கணினி தகவல்களுடன் ஒலி, ஒளி தகவலும் அனுமதிக்கப்படும் கட்டமைப்பு வகை.

ether talk : ஈதர் உரையாடல் : 'Apple' நிறுவனம் உருவாக்கிய மெக்கின்டோஷ் மென் பொருள். இதன் 'ஈதர்நெட் இன்டர்பேஸ்' NB அட்டையுடன் சேர்த்து அனுப்பப்படும். இது ஈதர்னெட் இணையங்களுக்கு ΜΑC தன்னை தகவமைவு செய்துகொள்ள உதவுகிறது.

ethics : ஒழுகலாறு;அறவியல் கோட்பாடு.

ETX : இடீஎக்ஸ் : End of Text என்பதன் குறும்பெயர்.

eudora : ஈடோரா : ஒரு மின்னஞ்சல் கிளையன் (Client) நிரல். இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத் தில் ஸ்டீவ் டார்னர் என்பவர் மெக்கின்டோஷ் கணினிகளில் செயல்படும் இலவச மென் பொருளாய் உருவாக்கியது. இப்போது மெக்கின் டோஷ் மற்றும் மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் கணினிகளில் செயல்படக்கூடிய இலவச மற்றும் விற்பனைக்கான மென்பொருளாய் குவால் காம் நிறுவனம் உருவாக்கி வெளியிட்டு வருகிறது.

European Article Number (EAN) : ஐரோப்பியப் பொருள் எண் : சில்லறை விற்பனைக் கடை களுக்கும், பேரங்காடிகளுக்குமான ஒரு பட்டைக் குறியீடு.

evaluation : மதிப்பிடல் : புதியதாக உருவாக்கப்பட்ட கணினி