பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

address memory

54

address translation


ஒரு கணினி தனக்கு ஒதுக்கப்பட்ட பிணைய முகவரி எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தேவையில்லாத தரவுகளை தடுக்கப் பயன்படும் ஒர் எண். எடுத்துக்காட்டாக, xxx. xxx. xxx. yyy என்ற முகவரியைப் பயன்படுத்தும் ஒரு பிணையத்தில், அதில் இணைக்கப்பட்டுள்ள கணினிகள் அதே முதல் முகவரி எண்களைப் பயன்படுத்துகையில், மறைப்பான் xxx. xxx. xxx முகவரிகளை மறைத்து விட்டு yyy முகவரியிலுள்ள குறிப்பிட்ட எண்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும்,

address memory : நினை முகவெண் முகவரி;நினைவக முகவரி.

address mode : முகவெண்முறை;முகவரிப் பாங்கு : கணினி நினைவகத்தில் ஒரு முகவரியை குறிப்பிடும் வழிமுறை, absolute address, Indexed address, paged address, relative address போன்ற சொற்களையும் காண்க.

address modification : முகவரி திருத்தம்;முகவரி மாற்றம் : கணினி ஒன்றினால் ஒரு குறிப்பிட்ட வழியில் முகவரியை மாற்றுவதற்கான நடவடிக்கை.

address, multi : பன்முக வெண்;பன் முகவரி.

address, one : ஒற்றை முகவரி.

address part : முகவரி பகுதி.

address port : துறை முகவரி.

address real : உண்மை முகவெண், மெய் முகவரி.

address, reference : மேற்கோள் முகவெண் : குறிப்பு முகவரி.

address register : முகவரிப் பதிகவகம் : தற்பொழுது நிறைவேற்றப்படும் ஆணையின் முகவரி உள்ள பதிவு.

address space : முகவரி இடம்;முகவரி பகுதி : கணினி ஒன்றைப் பயன்படுத்துவோருக்குக் கிடைக்கக்கூடிய முகவரிகளின் முழுத்தொகுப்பு.

address, specific : குறித்த முகவெண் : குறிப்பிட்ட முகவரி.

address resolution : முகவெண் அறிதல் : முகவெண் பதிலீட்டு அட்டவணையில், ஒரு வன்பொருள் உறுப்பின் முகவரியைக் கண்டறிதல்,

address resolution protocol : முகவெண் கண்டறி நெறிமுறை.

address translation : முகவரி பெயர்ப்பு : முகவரி மாற்றம் : உள் நினைவகத்தில் கோர்க்கப்பட வேண்டிய, அல்லது வேறிடத்