பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

expanded memory

553

expansion board


expanded memory : விரிவுபடுத்திய நினைவகம் : AT நுண் கணினிக் குடும்பத்தில், நுண் செயலி மூலம் நேரடியாக அணுக முடியாதவாறு அமைக் கப்பட்டுள்ள கூடுதல் நினைவகம். மையச் செயலகத்தினால் நேரடியாக அணுக முடியாதிருக்கிற நினைவக தொகுதிகள். செய்முறைப்படுத்தியின் முகவரி அமைவிடத்திலுள்ள இடைத் தடுப்புகளுக்குள் அல்லது பக்கச் சட்டங்களுக்குள் மாற்றி வைக்கப்பட்டுள்ள ஒருவகை நினைவக விரி வாக்கம். மரபு நினைவகத்தில் போதிய இடம் இல்லாதபோது, தரவுகளை இது இருத்தி வைத்துக் கொள்கிறது.

expanded memory emulator : வரிவுபடுத்திய நினைவகம் முன் மாதிரி : 386களுக்கான நினைவகப் பதிப்பி மேலாளர்.

expanded memory manager : விரிவுபடுத்திய நினைவக மேலாளர் : விரிவுபடுத்திய நினைவகத்தை பயன்படுத்துவதற்குப் பயன்பாட்டுச் செயல் முறையை இயல்விக்கிற செயற்பணிகளை வழங்கும் மென்பொருள் இயக்கி Lotus-Intel Microsoft Expanded Memory Standard (LIM-EMS) என்ற தர அளவு களுக்கிணங்க ஒரு சாதன இயக்கி மூலம் மேலாண்மை செய்யப்படும் நினைவகம்.

expanded memory specification : விரிவாக்க நினைவக வரன்முறை.

Expanded notation : விரிவாக்கிய குறிமானம்.

expanded storage : விரிவுபடுத்திய சேமிப்பகம் : IBM முதன்மைப் பொறியமைவுகளிலுள்ள துணை நினைவகம். இதில், தரவுகள் வழக்கமாக விரிவுபடுத்திய சேமிப்பகத்திலிருந்து மையச் சேமிப்பகத்து (முதன்மை நினைவகம்) 4 K பாளங்களில் மாற்றப்படுகின்றன.

expansion : விரிவாக்கம் : கணினியில் சில புதிய வன்பொருள்களை இணைத்து, அடிப்படையான செயல்பாடுகளுக்கு அப்பாலும் அதன் திறனை உயர்த்தும் ஒரு வழிமுறை. பெரும்பாலும் அச்சு மின்சுற்று பலகைகளை (விரிவாக்கப் பலகைகள்) கணினியின் தாய்ப் பலகையினுள் விரிவாக்கச் செருகுவாய்களில் செருகி, விரிவாக்கம் செய்யப்படுகிறது.

expansion bit : விரிவாக்க பிட்;விரிவாக்கத் துண்மி.

expansion board : விரிவாக்கப் பலகை : கணினிக்கு அதிகப்படியான செயல்பாடுகளைச் சேர்க்க