பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

expansion bus

554

expansion interface


விரிவாக்கப் பலகை

விரிவாக்கப் பலகை

வும் அல்லது புதிய வளங்களைச் சேர்க்கவும் அதன் முதன்மையான தரவு பரிமாற்றப் பாதையில் (பாட்டையில்) செருகப்படும் ஒரு மின் கற்றுப் பலகை. நினைவகச் சில்லுகள், இயக்கக் கட்டுப்படுத்திகள், ஒளிக்காட்சி இணைநிலை மற்றும் நேரியல் துறைகள், அக இணக்கிகள் போன்றவை இவ்வகையில் அடங்கும். மடிக்கணினி மற்றும் ஏனைய கையடக்கக் கணினிகளில் பொருத்தப்படும் விரிவாக்கப் பலகைகள் பற்று அட்டை (credit card) வடிவில் இருக்கும். இவை பீசி அட்டைகள் எனப்படுகின்றன. இவை கணினியின் பின்பக்கம் அல்லது பக்கவாட்டில் பொருத்தப்படுகின்றன.

expansion bus : விரிவாக்கப் பாட்டைவிரிவாக்கப் பலகைகள் ஒளிப் பேழைக் காட்சி, வட்டு இயக்கி போன்றவை செருகக்கூடிய கொள்கலங்களின் அல்லது வரிப்பள்ளங்களின் ஒரு தொடர் வரிசையைக் கொண்டுள்ள கணினிப் பாட்டை.

expansion card : விரிவாக்க அட்டை : கணினி அமைப்பின் திறனை அதிகரிப்பதற்குக் கூடுதல் சிப்புகள் அல்லது மின் கற்றுகளை அதில் ஏற்றும் நோக்கத்திற்காக கணினியில் சேர்க்கப்படும் அட்டை.

expansion interface : விரிவாக்க இடைமுகம்;விரிவாக்க இடைவெளி : ஆதார கணினியுடன் வட்டு இயக்கிகள் கூடுதல் நினைவகம் மற்றும் பிற வெளிப்புறப் பொருள்களைச் சேர்க்க உதவும் மின்சுற்று அட்டை.