பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

expansion port

555

expert system


expansion port : விரிவாக்கத் துளை வாய் : ஒரு கணினியிலுள்ள துளை. இது, கூடுதல் சுற்றுவழிப் பலகையை அல்லது சாதனத்தை இணைப்பதற்கு அனுமதிக்கிறது.

expansion slots : விரிவாக்க இடங்கள் : விரிவாக்கத் துளைகள் : ஆதார கணினிக்குக் கூடுதலாக புதிய விரிவாக்க அட்டைகளைச் சேர்க்கப் பயன்படுத்தும் கணினி மின்சுற்று அட்டையின் கூடுதல் இடங்கள். சான்றாக, கணினியின் முதன்மை நினைவகத்துடன் கூடுதல் நினைவக அட்டைகள் சேர்க்கப்படுதல். எளிமை யாக மாற்றங்கள் செய்ய வசதியாக அட்டைகளை வைக்க பெரும்பான்மையான கணினிகளில் விரிவாக்க இடங்கள் உள்ளன.

expansion unit : விரிவாக்க அலகு : கூடுதல் அச்சிட்ட மின்சுற்று அட்டைகள் பொருத்தப்படுவதற் காக கூடுதல் பொத்தான்களுடன் கணினியில் இணைக்கப்படும் சாதனம்.

exper logo : எக்ஸ்பர் செயல்முறை மொழி : எக்ஸ்பர் டெலி ஜென்ஸ் என்ற அமைவனம் தயாரித்துள்ள செயல் முறை மொழியின் மெக்கின்டோஷ் பதிப்பு. இது பெரும்பாலான செயல்முறை மொழிப் பதிப்பு களை விட அதிகமான செயற்பணிகளைக் கொண்டது. LISP மொழி போன்றது.

expert shell : நிபுணத்துவப் பொதிவு : நிபுணத்துவப் பொறியமைவில் அல்லது KBSஇல் உள்ள விதி ஆதாரத்தை ஆதரிக்கக்கூடிய செயல் முறை தரவு ஆதாரத்தை உருவாக்க, இது ஒரு மேம்பாட்டுக்கருவி வடிவத்தை எடுத்துக் கொள்கிறது. தரவுத் தளங்கள், சொல் பகுப்பிகள் போன்ற பிற ஆதாரங்களிலிருந்து விதியாதாரத் திற்குச் தரவுகளையேற்றலாம்.

expert support system : வல்லுநர் உதவி அமைப்பு : வல்லுநர் துணை அமைப்பு : வல்லுநர் அமைப்பு போன்றது. பெரும்பாலும் முடிவெடுக்க உதவும் அமைப்புடன் சேர்த்தே பயன்படுத்தப் படுவது. முறையான விதிகளுக்குப் பதிலாக உணர்ந்தறி காரணிகளை ஆய்ந்து சிக்கல்களைத் தீர்க்க உதவுவது.

expert system : வல்லுநர் அமைப்பு : நிபுணத்துவப் பொறியமைவு : சிறப்பான சிக்கல் தீர்க்கும் நிபுணத்துவத்துடன் உள்ள மனித/ எந்திர அமைப்புகளை உருவாக்குவதற்கான முறைகளும், தொழில்நுட்பங்