பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

expert system building

556

expire


களும் செயற்கை நுண்ணறிவின் இந்தப் பகுதியைத் தொடர்வதனால் மனித நிபுணத்துவத் திற்கு முக்கியத்துவமும், துறை கருதாத சிக்கல் தீர்க்கும் முறையினைக் குறைப்பதுமான அறிவு முறை வலியுறுத்தப்படுகிறது. சிக்கல்களைத் தீர்ப்பதற்காக நிபுணருக்கு உதவவும் அவருக்கு பதிலாக செயல்படவும் செய்கிறது.

expert system building tools : நிபுணத்துவப் பொறியமைவுக் கட்டுமானக் கருவிகள் : நிபுணத்துவப் பொறியமைவினை உருவாக்கிப் பேணி வருவதற்கு உதவுவதற்காக உருவாக்கப் பட்டுள்ள ஒரு மென்பொருள்.

expert system expireware : நிபுணத்துவப் பொறியமைவு முடிவுறு மென்பொருள் : தேதி அல்லது பயன்பாடுகளின் எண்ணிக்கை உள்ளுக் குள்ளேயே முடிவுறு தேதியைக் கொண்டுள்ள மென்பொருள்.

expert system shell : வல்லுநர் முறைமை செயல்தளம்.

expiration date : முடிவுத் தேதி;காலாவதித் தேதி : ஒரு மென் பொருளின் மாதிரியம் அல்லது பரிசோதனைப் பதிப்பு இயங்காமல் நின்றுவிடும் தேதி. ஒருமென்பொருளை விற்பனை க்குக் கொண்டுவரும் முன்பு அதற்கான பரிசோதனைப் பதிப்பினை (Beta or Trial) பயனாளர்களுக்குத் தருவர். விற்பனைக்குள்ள சில மென்பொருள்களை சிறிது காலத்துக்கு இலவச மாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், பிடித்திருந் தால் பணம் செலுத்தும்படியும் கூறுவர். இது போன்ற மென்பொருள் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் இயங்காமல் போகும். அந்தத் தேதிக்கு முன்பாக புதிய பதிப்பைப் பெற வேண்டும்; அல்லது அதற்குரிய அணுகுக் குறியீட்டைப் பெற வேண்டும்; அல்லது பணம் செலுத்திப் பதிவெண் பெற வேண்டும்.

explicit address : தெளிவான முகவரி ; வெளிப்படையான முகவரி : மூல மொழி நிரலாக்கத் தொடரில் தெளிவாகச் சொல்லப்பட்ட சேமிப்பகத்தின் முகவரி Symbolic Address-க்கு, எதிர்ச்சொல்.

expire : முடிவு : காலாவதி : ஒரு மென்பொருள் முழுமையாக அல்லது ஒரு பகுதி செயல்படாமல் நின்றுபோதல். பரிசோதனைப் பதிப்புகள் பெரும் பாலும், முழுப் பதிப்பு வெளியிடப்படும் தருணத்தில் செயல்படாமல் போகுமாறு நிரலாக்கம் செய்திருப் பர்.