பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

exploded view

557

export


exploded view : வெடித்த கருத்து;தெறிப்புத் தோற்றம் : ஒரு முழு மையைப் பகுதிகளாகப் பிரித்து அம்முழுமைக்கும் பிற பகுதிகளுக்கும் உள்ள உறவுகளைக் காட்டும் திட கட்டமைப்பின் வரைபடம்.

explore : முழுதும் தேடு.

explorer bar : எக்ஸ்புளோரர் பட்டை.

exponent : அடுக்குக் குறி;அடுக்குக் குறிமானம் : 1. ஒரு குறியீடு அல்லது எண்ணின் வலதுபுற மேற்பகுதியில் எழுதப்படும் குறியீடு. அந்தக் குறியீட் டின் காரணியாக எத்தனை முறை அது பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. 10-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்ணில் பத்துப் பத்துகள் என்பதைக் குறிப்பிட 102 என்று எழுதும் சுருக்கமுறை. ஆதார எண்ணைக் காரணியாக்கி எத்தனை முறை பயன்படுத்தப் படுகிறது என்பதை அடுக்குக் குறியீடு குறிப்பிடுகிறது. 2. பதின்மப் புள்ளி எண்முறையில் E என்ற எழுத்தின் மூலம் அடுக்குக் குறியீடு குறிப்பிடப் படுகிறது. 10E2 என்றால் 10இன் அடுக்குக் குறி 2 என்று பொருள்

exponential notation : அடுக்குக் குறியீடு.

exponential smoothing : அடுக்கு முறை சரியாக்கல்;அடுக்கு முறை சீர்மையாக்கம் : தர மதிப்பு இட்டு நகரும் சராசரி முறையில் வருவது உரைத்தல். இம்முறையில் முந்தைய கூற்றுகளை வயதின் அடிப்படையில் கழித்தல். அண்மை தரவுகளுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படும். அவற்றை வயதின் அடுக்குமுறை பணியின் மூலம் தகவல்கள் தர மதிப்பிடுவதால் இந்த சரியாக்கலை அடுக்கு முறை சரியாக்கல் என்று கூறப்படுகிறது.

exponentiation : அடுக்குமுறையாக்கல்;அடுக்குப்பெருக்கல்;அடுக்கேற் றம் : ஒரு எண்ணின் அடுக்கை பயன்படுத்துபவர் கணக்கிட்டுச் சொல்ல உதவும் செயல்முறை அல்லது பணி. எடுத்துக்காட்டாக 9 என்ற எண்ணை 5 முறை அதன் பெருக்குத் தொகையாலேயே பெருக்குவதற்குப் பதிலாக ஒரே தடவையில் கணக்கிடுதல்.

export : ஏற்றுமதி : ஒரு தரவு தள அமைப்புக்காக மற்ற நிரலாக்கத் தொடர்களில் பயன் படுத்தக்கூடிய வகையில் தரவுகளை எழுதுதல் (பொதுவாக வட்டு கோப்பில்). பல தரவு தள செயல் வரைவாளர்கள் தங்கள் தரவுகளை ஏதாவது ஒரு குறியீட்டு வடிவத்தில் அமைப்