பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

address, variable

55

advanced BASIC


துக்கு மாற்றப்பட வேண்டிய முகவரிக்கு ஏற்கெனவே நினைவகத்தில் உள்ள தரவுவின் அல்லது நிரலின் முகவரியை மாற்றும் நடைமுறை.

address, variable : மாறு முகவெண்.

address, virtual : மெய் நிகர் முகவரி;மாய முகவெண்.

address, zero level : சுழி நிலை முகவெண்.

add separater : பிரிப்பி சேர்.

add-subtract time : கூட்டு கழிப்பு நேரம் : இரண்டு எண்களைக் கூட்டவும், கழிக்கவும் எடுத்துக் கொள்ளப்படும் நேரம்.

add time : கூட்டல் நேரம் : ஒரு கூட்டலைச் செய்யக் கணினிக்குத் தேவைப்படும் நேரம். இதில் சேமிப்பிலிருந்து தரவுகளைப் பெறுவதற்கும் மீண்டும் அதனை சேமிப்பகத்துக்கு அனுப்புவதற்கும் தேவைப்படும் நேரம் அடங்காது.

add to favourites : கவர்வுகளில் சேர்.

add trend line : போக்கு வரி சேர்.

ad hoc inquiries : தற்காலிக வேண்டுகோள்கள் : தனிப்பட்ட, பட்டியலிடப்படாத, சூழ்நிலைக்கேற்ற தரவு வேண்டுகோள்கள்.

ad hoc query : தற்காலிக வினவல்;தற்காலிகத் தேடல் : கோப்பில் எந்த இடத்திலாவது இருக்கும் தரவுவை திரும்பப் பெறுவதற்கான திறன்.

ADI (Apple Desktop Interface) : ஏடிஐ (ஆப்பில் கணினி இடை முகம்).

adjacency operator : அண்மைய செயற்குறி.

adjacent matrix : அண்டை அணி;அருகு அணி.

adjective : பெயரடை.

adjust : சரிசெய்தல்.

adjust to : சரியாக்க.

administrative data processing : நிர்வாகத் தரவுகள் செயலாக்கம் : நிர்வாகம் அல்லது நிறுவனம் ஒன்றின் நிரல் தொடர்பான தரவுகளைச் செய்முறைப்படுத்தும் துறையாகும்.

ADP : ஏடிபி : Automatic data processing என்பதன் குறும்பெயர். தானியங்கு முறையில் தரவுகளைச் செய்முறைப் படுத்தும் பணி.

advanced BASIC : மேம்பட்ட பேசிக்;உயர்நிலை பேசிக் :

தொடக்கக் கால பேசிக்