பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

extended VGA

560

external command


பியல் சாதனத்தைப் பிரிவினை செய்தல். எடுத்துக்காட்டு:ஒரு நிலைவட்டினை பல்வேறு தருக்கமுறைப் பகுதிகளாகப் பகுத்தல்.

extended VGA:நீட்டித்த விஜிஏ:ஒளிக்காட்சி வரைகலைக் கோவை(Video Graphics Array) தர வரையறைகளின் மேம்பட்ட வடிவம்.இது,ஒரு படிமத்தை 800x600 முதல் 1600x1200 வரைபடப் புள்ளித் தெளிவுடன் காட்ட வல்லது.ஒரு கோடியே 67 இலட்சம் (2') வண்ணங்கள் கொண்ட நிற மாலையைப் பெற முடியும்.இந்த நிறமாலையை ஒரு சாதாரண மனிதர் வேறுபடுத்திப் பார்க்கக் கூடிய அளவுக்கு ஒரு கோடியே 90 இலட்சம் வண்ணங்களைக் கொண்டதாக ஆக்க முடியும். எனவே இது,தொடர்முறை (Analog) தொலைக் காட்சிக்கு ஈடான நிறக்காட்சியைத் தரும் இலக்க முறைச் செந்தரம் எனக் கருதப்படுகிறது.

extensible tanguage:விரிவாக்கக்கூடிய மொழி ;நீட்டிப்பு மொழி:ஒரு நிரலாக்கத் தொடர் மொழியில் இருப்பதை மாற்றும் புதிய தன்மை களைப் பயனாளர் சேர்க்கின்ற கோட்பாடு.

extension:நீட்சி;நீட்டிப்பு:வழக்கமான தர அமைப்பில் உள்ளதற்கு மேலாக கணினி அமைப்பிலோ அல்லது நிரலாக்கத் தொடர் மொழியிலோ சேர்க்கப்படும் கூடுதல் தன்மை.

extention file:கோப்பு வகைப் பெயர்.

extension manager:நீட்டிப்பு மேலாளர் மெக்கின்டோஷ் கணினியிலுள்ள ஒரு பயன்பாட்டு நிரல்.கணினியை இயக்கும்போது எந்தெந்த நீட்டிப்புகளை நினைவகத்தில் மேலேற்றிக் கொள்ள வேண்டும் என்பதை வரையறுக்க பயனாளருக்கு உதவுகிறது.

extension name:நீட்சிப் பெயர்.

extent:அளவு:ஒரு துணை சேமிப்பகத்தில் தொடர்ச்சியாக உள்ள பருப்பொருள் பதிவுகளின் தொகுதி.

extent,file:கோப்பு நீட்டிப்பு.

external buffer:புற இடைநிலை நினைவகம்:ஒரு கணினிக்கும் மற்றொரு சாதனத்திற்கு மிடையே செல்லும் தரவுகளுக்கான ஒரு தற்காலிக தரவு சேமிப்புப் பகுதி.

external access protection:புற அணுகல் பாதுகாப்பு.

external command:புறநிலை ஆணை; புறக் கட்டளை:வட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உள்முக நினைவகத்தில் (RAM) நிரந்தரமாக ஏற்றி