பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

external data file

561

external repory


வைக்கப்பட்டிராத ஒரு தனிவகைக் கோப்பினை நிறைவேற்றுவதன் மூலம் இயக்குகிற ஒரு DOS நிரல்.

external data file:வெளிப்புற தரவுக் கோப்பு :புறத்தரவுக் கோப்பு:செயலாக்கம் செய்யும் நிரலாக்கத் தொடரிலிருந்து தனியாக சேமிக்கப் படும் தரவுகள்.

external device:புறநிலைச் சாதனம்:ஒரு கணினியின் உள்ளிணைந்த அங்கமாக அமைந் திராமல்,கம்பிவடச் செயல்முறை மூலம் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம்.

external,file:புறக் கோப்பு.

external gateway protocol:புற நுழைவி நெறிமுறை:பிணையங்களை இணைக்கும் திசைவிகளுக்கும் நுழைவிகளுக்கும் (Routers and Gateways)இருப்பு நிலைத் தரவுவைக் கொண்டு சேர்க்கும் நெறிமுறை.

external interrupt:புறநிலை இடையீடு அல்லது குறுக்கீடு:கணினி இயக்கி,புறநிலை உணர்வி,கண்காணிப்புச் சாதனம்,மற்றொரு கணினி போன்ற புறநிலை ஆதாரத்தின் மூலம் உண்டாகும் இடையீடு.

external label:வெளிப்புற அடையாளச் சீட்டு:ஒரு கோப்பு ஊடகத்துக்கு வெளியே அந்த கோப்பை அடையாளம் காண இணைக்கப்படும் அடையாளச் சீட்டு.காந்த மின்வட்டு அல்லது நாடா வைத்துள்ள உறையில் இணைக்கப்படும் காகிதச் சீட்டு அல்லது ஒட்டி.

external memory:வெளி நினைவகம்,புற நினைவகம்.

external modem:புறநிலை மோடெம்:ஒரு கணினியின் தொடர்வழிப் புழையுடன் இணைக்கப் படக்கூடிய மோடெம்' இது,ஒரு சுவர் வெளிவாயில் மூலம் தனது விசையைப் பெறுகிறது. இது, 'உள்முக மோடெம்' என் பதிலிருந்து வேறுபட்டது.

external reference:வெளிப்புற குறிப்பு:புற மேற்கோள்:ஒரு குறியீட்டை வேறு ஒரு வழக்கச் செயலில் வரையறுத்துள்ள குறிப்பு.

external report:புறநிலை அறிக்கை: ஏற்கனவே அச்சிடப்பட்ட வடிவத்தில் அல்லது வேறு வடிவில்.அரசாங்கத்திற்கோ அல்லது வாடிக்கை யாளர்களுக்கோ விநியோகிப்பதற்காக,ஒரு நிறுவ னத்திற்கு வெளியில் பயன்படுத்த உருவாக்கப் படும் அறிக்கை.


36