பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

external scheme

562

extranet


external routine : புறநிலை வாலாயம் : பாஸ்கல் செயல் முறைப்படுத்தும் மொழியில், செயல்முறைக்கு வெளியிலிருந்து வாலாயத்தை வரையறுப்பதற்கு வரவழைக்கக் கூடிய ஒரு நடைமுறை அல்லது செயற்பணி.

external scheme : புறநிலைத் திட்டம் : ஒரு குறிப்பிட்ட பயனாளரின் தரவுத்தள நோக்கின் வரம்பெல்லை தொடர்பான ஒரு தரவுத் தளத் துணைத் திட்டம்.

external sort : புறநிலைப் பிரிப்பு : பன்னோக்குப் பிரிப்பு நிரலாக்கத் தொடரில் இரண்டாம் நிலை. தரவுகளின் சரங்களை வரிசை யாக ஒன்று சேர்த்து ஒரே சரமாக ஆகுமாறு செய்தல்.

external storage : புறநிலைச் சேமிப்பகம் : துணை சேமிப்பகம் போன்றது.

external symbol : புறநிலைங் குறியீடு : 1. கட்டுப்பாடு பிரிவின் பெயர். நுழைவு இடத்தின் பெயர் அல்லது வெளிப்புறக் குறிப்பு. 2. வெளிப் புறக் குறியீடு அகரமுதலியில் உள்ள குறியீடு.

external symbol dictionary : புறநிலைக் குறியீட்டு அகரமுதலி : ஒரு நிரலாக்கத் தொடரில் உள்ள புறநிலைக் குறியீடுகளை அடையாளம் காணுதல் தொடர்பான கட்டுப்பாட்டு தரவு.

external viewer : புறப்பார்வை நிரல்;புறக் காட்சி நிரல் : தற்போது பயன்படுத்திக் கொண் டிருக்கும் பயன்பாட்டுத் தொகுப்பினால் கையாள முடியாத வகையைச் சேர்ந்த ஓர் ஆவணத்தைப் பார்வையிடப் பயன்படும் ஒரு பார்வைநிரல்.

extract'வெளியே எடு : ஒரு வடிகட்டி அல்லது மேற்பகுதி முடிவு செய்யும் ஒரு கணினி கோப்பில் இருந்து குறிப்பிட்ட தரவுவை வெளியே எடுத்தல்.

extra-high-density floppy disk : கூடுதல் மிகுஅடர்வு நெகிழ் வட்டு' : 4 எம்பி தரவு சேமிக்க வல்ல 3. 5 அங்குல நெகிழ் வட்டு. இதனை இயக்க இரண்டு முனைகள் கொண்ட தனிச் சிறப்பான இயக்ககம் (Drive) தேவை.

extranet : புறப்பிணையம் : ஒரு நிறுவனம் இணையத் தொழில்நுட்ப அடிப்படையில் (குறிப் பாக வைய விரிவலைத் தொழில் நுட்பங்கள்) தமது நிறுவனப் பிணையத்தை அமைத்திருப்பின் அதனை அக இணையம் (Intranet) என்றழைக் கிறோம். அந்த நிறுவனத்துக்கு பொருள் வழங்கு வோர்,