பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

extrapolation

563

ezine


வாடிக்கையாளர் இவர்களும் வரம்புக்குட்பட்ட வகையில் நிறுவனப் பிணையத்தை அணுக அனுமதித்தால் அதனை புறப்பிணையம் எனலாம். இவ்வாறு அனுமதிப்பதால் வணிக நடவடிக்கைகள் விரைவுபடுகின்றன. உறவுகள் பலப்படுகின்றன.

extrapolation : புற இடுகை.

extrinsic semiconductor : புறத் தூண்டல் குறைகடத்தி : (P) -வகை அல்லது (N-) வகை மாசு சேர்ப்பதன் மூலம் வெப்பப்படுத்துதல் போன்ற சூழ்நிலைகளில் மின்னணுக்களைப் பயணிக்க வைத்து மின்சாரத்தைக் கடத்துகின்ற ஒருவகைக் குறைகடத்தி. மின்னணுக்களை அவற்றின் இயல்பான நிலையிலிருந்து வலிந்து நகரச்செய்து புதிய மின்னணுக்கற்றை அல்லது மின்னணு இடைவெளிகளை உருவாக்குகின்றன.

ezine : மின்னிதழ் : மின்னணு இதழ் என்பதன் சுருக்கம். இணையம், அறிக்கைப்பலகைச் சேவை (BBS) மற்றும் இதர நிகழ்நிலைச் சேவை மூலம் பெரும்பாலும் இலவசமாக வழங்கப்படும் நாளிகை இதழ்.