பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

F

564

facing pages


F

F : ஃஎப் : 'Frequency' என்பதன் குறும்பெயர். இது அலை வெண் அல்லது அதிர்வெண் குறியீடாகும்.

F2F எஃப். 2. எஃப் : முகத்துக்கு நேராக என்று பொருள்படும் Face to Face என்ற தொடரின் குறுஞ்சொல். இணையத்தில் மின்னஞ்சலில் பயன்படுத்தப் படுகிறது.

fabricated language : உருவாக்கப்பட்ட மொழி; புனைவு மொழி : சங்கேத மொழி போன்றது.

fabrication உருவாக்கம்; புனைவு : விரும்பும் விதிமுறைகளுக்கேற்ப பொருள்களை உற் பத்தி செய்யும் செயல்முறை.

face : முகம்; முகப்பு : கணினி வரைகலைகளில், கூம்பு அல்லது பிரமிட் போன்ற பன்முக வடிவப்பொருள். பல பக்கங்கள் சேர்ந்து உருவாகும் இத்திடப்பொருள், 'திடப் பொருளின் முகங்கள்' என்று அழைக்கப்படும். சான்றாக, ஒரு கூம்புக்கு ஆறுமுகங்கள்.

FACE 'Field Alterable Control Element' என்பதன் குறும் பெயர்.

face time : பார்வை நேரம் : மற்றொருவருடன் நேருக்கு நேர் சந்தித்து செலவிட்ட நேரம். இணையம் வழிச் சந்திப்பை குறிப்பதில்லை.

facilities : வசதிகள் : கணினி மற்றும் தரவு தொடர்பு மையங்களில் பயன்படுத்தப்படும் பருப்பொருள் கருவிகள், மின் சக்தி , தரவுத் தொடர்பு கருவிகள் மற்றும் பிற வகையறாக்களைக் குறிப்பிடும் பொதுவான தொடர்.

facilities management : வசதிகள் மேலாண்மை : ஒரு தரவு செயலாக்க அமைப்பினை மேற் பார்வையிட்டு இயக்க, ஒரு தனிப்பட்ட சேவை நிறுவனத்தைப் பயன்படுத்தல்.

facility வசதி : 1. கணினி அமைப்பின் உற்பத்தித்திறனை முடிவு செய்ய கணினியை எளி தாகப் பயன்படுத்த முடிவதை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளுதல். 2. இரண்டு முனை களுக்கிடையில் மின்சாரப் பரி மாறலுக்கான வழித் தடம்.

facing pages : எதிர்ப்பக்கங்கள் : ஒரு கட்டுமானம் செய்யப்பட்ட ஆவணத்தில், ஆவணத்தைத் திறக்கும்போது ஒன்றை யொன்று எதிர்நோக்கியவாறு