பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

565


உள்ள இரு பக்கங்கள். இரட்டை எண்ணுடைய பக்கம் இடப் பக்கத்திலும், ஒற்றை எண் பக்கம் வலப்புறத்திலும் இருக்கும்.

facsimile : தொலைநகலி : 1. படங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றை அனுப்புதல். உருக்களை அனுப்பும் கருவி மாற்றி அனுப்ப, அவற்றைப் பெறும் நிலையத்தில் மீண்டும் உருவாக்கி ஒரு வகையான காகிதத்தில் நகலெடுத்தல். தொலை நகலெடுத்தல் என்றும் அழைக்கப்படும். 2. மூல வண்ணத்தை உள்ளது உள்ளபடி நகலெடுத்தல். 3. உண்மை நகல் மறு ஆக்கம். Fax என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.

facsimile transceiver : தொலை நகல் போக்கு வருவி : உருவங்களை மின்னணு அனுப்பு முறையில் அனுப்பவும் பெறவும் பயன்படுத்தும் அலகு.

facsimile transmission : தொலை நகல் செலுத்தம்; தொலை நகல் அனுப்பீடு.

factor : காரணி : கணித முறைப் படி செயற்படக்கூடிய ஒரு தரவு கூறு அல்லது மாறுவகை மதிப்புரு.

factor analysis : காரணி ஆய்வு : முக்கியத்துவத்தின் தன்மையையும், மிக முக்கிய காரணிகளையும்முடிவுசெய்ய பல காரணிகளின் இடைச்செயலை ஆய்வு செய்யும் கணிதத் தொழில் நுட்பம்.

factor, blocking : தடு, காரணி .

factorial : படிவரிசைப் பெருக்கப் பேரெண் : 1-லிருந்து குறிப் பிட்ட எண்ணுக்கு எல்லா முழு எண்களையும் (Integer) பெருக்கு வதன் மூலம் கணித்து காரணிகளை உருவாக்குதல். காரணியத்தைக் குறிப்பிடப் பயன்படுத் தப்படுகிறது. சான்றாக 4! என்பது 1 x 2 x 3 x 4-க்கு சம மானது; n! என்பது 1 x 2 x 3 x4 x .... (n - 1 ) x n -க்குச் சமமானது.

factor, scale : அளவுகோல் காரணி. அளவீட்டுக் காரணி.

facts : பொருண்மைகள் : சிறிய /நடுத்தர வணிகத்திற்கு வசதிகள் (பொதுப் பேரேடு, வரவுக் கணக்குகள், செலுத்தக் கணக்குகள்) உடைய நிதியியல் கணக்கீட்டுப் பொறியமைவு.

fact template : பொருண்மைப் படிம அச்சு; நிகழ்வுப் படிம அச்சு.

failsafe : பழுது தடுப்பி.

fail - safe system : பழுது தடுப்பு அமைப்பு. பெரும்சேதம் ஏற்படுவதைத் தடுக்க உருவாக்கப்படும் அமைப்பு.