பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

566


fail - soft system

fairness

இதனால் சில வசதிக் குறைவும் ஏற்படலாம். சான்றாக, கணினி கட்டுப்பாட்டு சாலை விளக்கு அமைப்பில், ஒரு தவறு ஏற்பட்டால், விளக்குகளை நிறுத் வதற்குப் பதிலாக, பழுது தடுப்பு அமைப்பின்படி, சாலை விளக்குகள் யாவும் சிகப்பு நிறத்தைக் காட்டும். மின்சக்தி நிலைய இயக்கத்தில், வெப்பம் அளவுக்கதிகமாகும்போது மின் வழங்குதல் துண்டிக்கப்படும்.

fail - soft system : பழுதாயினும் பணியாற்றும் அமைப்பு : ஒரு கணினி அமைப்பின் சில பகுதிகள் மட்டும் செயல்படவில்லை என்றாலும் தரவுச் செயலாக்கம் தொடரும் அமைப்பு. வழக்கமாக, அதைத் தொடர்ந்து செயல்திறனும் சீர்கேடு அடையும். பழுது தடுப்பு அமைப் பில் சொல்லப்பட்ட அதே எடுத்துக்காட்டைப் பயன்படுத்திக் கூறுவதென்றால் கோளாறு ஏற்படும்போது சாலை விளக்குகள் மஞ்சள் ஒளிவீசும், வெப்பம் அதிகமாகும்போது இந்த அமைப்பின்படி, மின்சக்தி வரும் ஆரம்ப பகுதியை நிறுத்தி விட்டு, அவசர சாதனமாகிய மாற்று மின்கலம் மூலம் மின் சக்தி வழங்குவது தொடரும்.

failure : பழுது : கணினி அல்லது கணினி சார்ந்த சாதனம் சரியாகச் செயல்படாமை அல்லது செயல்படா நிலை. மின்சாரம் நின்று போனால் கணினி செயல்படாமல் போகிறது. இதைத் தவிர்க்க மின் கலன் உடைய காப்பு மின்சாதனம் (யுபிஎஸ்) பயன்படுத்தலாம். கணினியை முறைப்படி நிறுத்தி வைக்கும் மின்சாரம் கிடைத்துக் கொண்டிருக்கும்.

failure prediction : பழுது முன்னறிவித்தல் : குறிப்பிட்ட துணை பாகங்கள் அல்லது கருவிகள் பழுதடையப்போவதை முன்ன தாகவே மதிப்பிட்டு அவற்றை நீக்கி வேறு ஒன்றை அந்த இடத் தில் பொருத்தி பழுது ஏற்படும் முன்பு சரி செய்து முடித்தல்.

failure rate : பழுது வீதம் : ஒரு கருவி செயல்படுவதிலுள்ள நம்பகத் தன்மையை அளவிடும் முறை. ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவில் எத்தனை முறை பழுதாகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது.

Fair child : ஃபேர்சைல்ட் : 1974இல் F-8 என்ற நுண்சிப்புவினை உருவாக்கிய ஒரு நிறுவனம். அந்தச் சமயத்தில் இந்தச் சிப்பு பெருமளவில் விற்பனையாகியது.

fairness : உறுதி; நயமை : ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின்