பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

567


fair pointer

ஒரு கணினி அமைப்பில் தேவைப்படும் அனைத்துச் செயல்களும் உத்திரவாதமளிக் கப்படும் நிலை.

fair pointer : நடுநிலைச் சுட்டுமுள் : இன்டெல் 80 x 86 கூறிடப்பட்ட முகவரி எண்ணில், கூறு, மாற்றச்சு இரண் டையும் உள்ளடக்கியுள்ள ஒரு நினைவக முகவரி எண்.

fair use : நியாயமான பயன் நுகர்வு : சட்டப்படி பயன்படுத்தல் : பதிப்புரிமை பெற்ற ஒரு மென்பொருளை சட்டப்படி பயன்படுத்திக் கொள்ளுதல்.

falcon , ஃபால்க்கன் : சேமித்து வைக்கப்பட்ட செயல்முறை நினைவுப் பதிப்பானாக அல்லது தறியாகச் செயற்படும் காகித நாடா.

fall back : சார்ந்து நிற்றல் : அவசர சூழ்நிலையில் மாற்று ஏற்பாட்டைப் பயன்படுத்துதல். காலமுறை அமைப்பில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டால், மாற்று நிரலாக்கத் தொடர், தரவுத் தளம் உடனடியாக செயல்படுத்தப்படல்.

fallout : விழுந்துவிடல், சிதறல் : மின்னணு பாகங்கள் பழுது அடைதல். புதிய கருவியை எரிய வைக்கும்போது சில சமயங்களில் இது ஏற்படுகிறது.

567

fan

family of computers : கணினிக் குடும்பம் : ஒரு அளவை முறை வடிவமைப்பில் உள்ள வேகம் மற்றும் முதன்மை நினைவகத் திறன்களில் மட்டும் மாறுபடுகிற மையச் செயலக அலகுகளின் தொடர். குறைந்த செலவுள்ள மெதுவாகச் செல்லும் மையச் செயலகத்தில் இருந்து துவங்கி கணினி அமைப்பின் மற்ற பகுதிகளை மாற்றாமல் வேகமாக இயங்கும் மையச் செயலகங்களை மட்டும் வேலைப் பளுவிற்கேற்ப மாற்றிக்கொள்ளுதல்.

FAMOS : ஃபமாஸ் : Floating Gate Avalanche injection-MOS என்பதன் குறும்பெயர். PROM போன்ற மின்சக்தி மூலம் சேமிப்பகச் சாதனங்களை உருவாக்கும் தொழில் நுட்பம்.

fan! : விசிறி : கணினி உட் பாகங்கள், லேசர் அச்சுப்பொறிகள் தொடர்ந்து செயல்படும் போது வெப்பம் உண்டாகிறது. இதன் காரணமாய் அக்கருவி செயல்படாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. இக்குறையைத் தவிர்க்க அக்கருவிகளுக்குள் விசிறி பொருத்தப்படுவதுண்டு. கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது தொடர்ந்து ஒரு மெல்லிய இரைச்சல் ஒலி கேட்டதுண்டா? அது விசிறி யின் சத்தமே.