பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

568


fan

fan! : பிரி; பிரிப்பு : அச்சுப் பொறியின் இரண்டு தாள்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளாமல் வரச் செய்வது.

fanfold paper : விசிறி மடிப்புத் தாள் : ஒவ்வொரு பக்கத்தையும் குறிக்க விசிறி போன்று மடித்து, தொடர்ந்து இடைவெளிகளில் துளைகள் இடப்பட்ட ஒரு நீண்ட தொடர் காகிதத் தாள்.

fan - in உள்வீச்சு : ஒரு இலக்க முறை உறுப்புக்கு உள்ளீடு செய்யப்படும் சமிக்கைகள்.

fan - out : வெளிவீச்சு : 1. மோசமான நிலையிலும், டீடிஎல் (TTL) சாதன வெளியீடு ஏற்றக் கூடிய டீடிஎல் அலகுகள். 2. ஒரு வடிவமைக்கப்பட்ட நிரலாக்கத் தொடரில் ஒரு குறிப்பிட்ட மாடுலின் கீழ் அமைக்கப் படும் நிரலாக்கத் தொடர் கூறு களின் (Modules) எண்ணிக்கை.

fanzine : சுவைஞர் இதழ் : ஒரு குழு, ஒரு நபர் அல்லது ஒரு நடவடிக்கைமீது பற்றுக் கொண்டுள்ள சுவைஞர்களால் அத்தகைய சுவைஞர்களுக்காக இணையத்தில் மினனஞ்சல் வழியாக வழங்கப்படுகின்ற ஒரு இதழ்.

FAQ எஃப்ஏகியூ (அகேகே) : அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் என்று பொருள்

FAST

படும். Frequently Asked Questions என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு குறிப்பிட்ட பொருள்பற்றி பொதுவான வினாக்களும் அவற்றுக் குரிய பதில்களும் அடங்கிய ஒர் ஆவணம். இணையத்தில் செய்திக் குழுக்களில் புதிய உறுப்பினர்கள், ஏற்கெனவே பலமுறை பதிலளிக்கப்பட்ட கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்பதுண்டு. இப்படிப்பட்ட கேள்வி பதில்களைத் தொகுத்து நூலாக வெளியிடுவார்.

farad : ஃபராடு : தாங்கும் தன்மை அளவின் அலகு. 1 வோல்ட் திறன் அதனுள் அனுப்பப்படும்போது 1 கூலும் மின் ஆற்றல் அலகு சக்தியை அது சேமிக்குமானால் ஒரு தாங்கி யின் தாங்கும் திறன் 1 ஃபராட் என்று மதிப்பிடப்படுகிறது.

FAST . ஃபாஸ்ட் : 'மென் பொருள் திருட்டு எதிர்ப்பு கூட்டமைப்பி என்று பொருள். "Federation Against Software Theft" என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஒர் அமெரிக்க மென்பொருள் தொழிற் கழகம். இது கோப்புகளை மிக விரைவாக அனுப்புவதற்கு உதவுகிறது. கோப்பு முழுவதும் அனுப்பப்பட்டதும் பிழைதிருத்தம் நடைபெறுகிறது.